நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் குழுமம் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து நெஞ்சே எழு, இளையராஜாவின் லைவ் இன் கச்சேரி சிங்கப்பூர், வாய்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ், மடை திறந்து போன்ற சினிமா தொடர் கச்சேரிகளை முன்னெடுத்து நடத்தியது.
தவிர, நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நம்ம ஊரு ஹீரோ, சூர்யா சூப்பர் சிங்கர் மற்றும் இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் பட ஆடியோ வெளியீடு போன்ற நேரடி நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்தியது.
தற்போது ஒரு புதிய முயற்சியாக எடிட்டிங் பயிற்சி வகுப்பைத் தொடங்குகிறது. அதையடுத்து நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் குழுமத்தை தொடர்பு கொண்டோம்…
” ‘ஆர்ட் ஆஃப் எடிட்டிங்’ என்பது உலகெங்கிலும் வளர்ந்து வரும் எடிட்டர்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்த உதவும் வகையில் பயிற்சியளிப்பதற்கான புதிய திட்டமாகும். இன்றைய சூழ்நிலையில், இந்த கட்டத்தில் இந்த பாடத்திட்டத்தைத் தொடங்குவது ஏராளமான ஆர்வலர்களுக்கு அவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் , சமீபத்திய நுட்பங்களை புதுப்பித்து மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் அறிவையும் , திறமையையும் மேம்படுத்துவதற்கு பயனளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் படிப்புகளுக்கு தலா 2 தனித்தனி நேரம் ஒதுக்கீடு செய்து வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தில் பைனல் கட் புரோ எக்ஸ், பிரீமியர் புரோ மற்றும் ஃபோட்டோஷாப் ஆகியவை அடங்கும்.
ஆர்வமுள்ளவர்கள் எங்களை +91 9176130643 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது connect@noiseandgrains.com-ல் எங்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.