‘பண்ணையாரும் பத்மினியும்’ , ‘சேதுபதி ‘படங்களை இயக்கிய எஸ்.யூ. அருண்குமார் அடுத்து இயக்கும் படத்திலும் விஜய் சேதுபதியே கதாநாயகனாகிறார். படத்தில் இவருக்கு ஜோடி அஞ்சலி!

‘பாகுபலி 2’ படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதை தொடர்ந்து விஜய் சேதுபதி – இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் கூட்டணியின் புதிய படத்தை மிக பிரமாண்டமான முறையில் , அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் துவக்கவிழா இரண்டு நாட்கள் முன் நடந்தது!

படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்காவும் முக்கியமான கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னாவும் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது.

ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன். எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத். PRO – மௌனம்ரவி. தயாரிப்பு மேற்பார்வை – கே.சிவசங்கர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.U.அருண்குமார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here