‘பாக்கியலட்சுமி.’ ஒரு இல்லத்தரசியின் சொல்லப்படாத வாழ்க்கைக் கதை! விஜய் டிவியின் புதிய தொடர்…

0
66

 

நம் அன்றாட வாழ்க்கையில் வாழும் கடவுளாக இருப்பவள்தான் தாய்.  அவளின் வாழ்வில் அவளுக்கென்று தனியே வெறுப்பு விருப்பு என்று எதுவும் கிடையாது. குடும்பம் தான் அவளுக்கு எல்லாம்.  அத்தகைய ஒரு தாய் தான் பாக்கியலட்சுமி.

அப்படிப்பட்ட தாயாக இருக்கும் பாக்கியலட்சுமி, தன் வாழ்வின் கதையை நம்மிடம் பகிர்ந்து கொள்ள வருகிறாள்.

பாக்யலட்சுமி ஒரு இல்லத்தரசி. அவள் கணவர் கோபிநாத், வளர்ந்த மூன்று குழந்தைகள் செழியன், எழில் மற்றும் இனியா.  அவர்களுடையது கூட்டு குடும்பம். மாமனார், மாமியார் மற்றும் மைத்துனர்கள் சேர்ந்துதான் வசிக்கிறார்கள்.  குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என்னனென்ன தேவை, அவர்கள் விரும்புவது என்ன விரும்பாதது என்ன, என்பதை கவனித்துக் கொள்வதுதான் பாக்யலட்சுமியின் அன்றாட வேலை .  துரதிர்ஷ்டவசமாக யாரும் அவளைக் கவனிப்பதில்லை, அல்லது அவளுடைய அன்பையும், பாசத்தையும், ஒரு பொருட்டாக மதித்ததில்லை.

அவள் சமையலில் சிறந்தவள்.  கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள், ஆங்கிலம் தவிர பல மொழிகளில் சரளமாகப் பேசுவாள்.  ஆங்கிலம் பேசாதது அவளுடைய வீட்டில் தாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த விஷயங்கள் எதுவும் அவளை ஒரு போதும் பாதித்ததில்லை.

ஆனால் அவள் வாழ்க்கையை புரட்டிப் போடும் ஒரு விஷயத்தை அவள் எதிர்கொள்கிறாள்.  அது அவளுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.  அதனால் அவள் ஒரு முடிவை எடுக்கிறாள்.  அவளை உலுக்கிய அந்த விஷயம் என்ன ?.  அவள் எப்படி வேறுபட்ட ஆளுமையாக மாறுகிறாள் என்பதுதான் ‘பாக்கியலட்சுமி’யின் கதை.

வரும் மார்ச் 16 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது ‘பாக்கியலட்சுமி’.

நடிகர்கள் – கதாபாத்திரங்கள்

சுசித்ரா – பாக்கியலட்சுமி
சதீஷ் – கோபிநாத்
வேலு – செழியன்
விஷால் – எழிலன்
நேஹா – இனியா
ராஜலட்சுமி – ஈஸ்வரி (ராஜாராணி தொடர் மாமியார்)
வீனா – ராதிகா
ரொசாரியோ – ராமமூர்த்தி
ஸ்ரீத்து – ஆனி

இயக்கம் – சிவசேகர் (பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர்)
ஒளிப்பதிவு – வெங்கடேஷ்
இசை–கிரண்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here