சீரியல் நடிகை வாணிபோஜன் இப்போ சினிமா ஹீரோயின்; வைபவுக்கு ஜோடியானார்!

0
403

நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ்-வாணி போஜன் நடிப்பில் உருவாகும் திரைப்படம்..!

வாணி போஜன்

இன்னமும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரபல சீரியல் நடிகையான வாணி போஜன் நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோரும் நடிக்கிறார்கள். மேலும் ஒரு முக்கிய சர்ப்ரைஸும் இந்தப் படத்தில் இருக்கிறது.

அறிமுக இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் மோகன்ராஜாவிடம் இயக்குதல் பணியைப் பயின்றவர்.

கிரைம், சஸ்பென்ஸ் திரில்லர் டைப்பில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது.

தொழில் நுட்பக்குழு:- ஒளிப்பதிவு – சந்தானம் சேகர், இசை – அரோல் கரோலி, படத் தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த், சண்டை இயக்கம் – மிராக்கில் மைக்கேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here