பணத்தின் மீதான பேராசையை மையப்படுத்தி  உன்னால் என்னால்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகியிருக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ கணேஷா  கிரியேசன்’ பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக  நடிக்க கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள்.

முக்கிய வேடமொன்றில் இயக்குனர் ஏ.ஆர். ஜெயகிருஷ்ணா நடிக்கிறார்.  இவர்களோடு ராஜேஷ்,ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் சோனியா அகர்வாலும் இருக்கிறார் என்பது ஹைலைட்!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயக்கும்  ஏ.ஆர். ஜெயகிருஷ்ணாவிடம் படத்தின் கதை பற்றி கேட்டோம்.

“பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.

மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ். அவருக்கு செகரட்ரியாக இருக்கும் சோனியா அகர்வால் ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்கத் திட்டமிடுகிறார் அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ் ஜெயகிருஷ்ணா மூவரும். இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதித் திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை.

இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.

அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம். உன்னால் என்னால் படம் வித்தியாசமாக இருக்கும்’’ என்றார்.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்:-

ஒளிப்பதிவு  –  கிச்சாஸ்

இசை  – முகமது ரிஸ்வான்

பாடல்கள்  –  தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான்.

எடிட்டிங்   –  M.R.ரெஜிஷ்

கலை  –  விஜய்ராஜன்

நடனம்   –  கௌசல்யா

ஸ்டன்ட்  –  பில்லா ஜெகன்.

தயாரிப்பு நிர்வாகம் –  மணிகண்டன்.

தயாரிப்பு  –  ராஜேந்திரன் சுப்பையா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here