குறும்படவுலகில் முத்திரை பதித்தவர் ஏகே என்கிற அருண் கார்த்திக் .இவரது ‘லேகா’ குறும்படம் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் இப்போது முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படத்தை இயக்குகிறார்.

படத்துக்குப் பெயர் ‘சூப்பர் டூப்பர்.’ படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா நேற்று சென்னையில் நடந்தது.

படத்தின் நாயகன் துருவா . இவர் ‘ஆண்மை தவறேல் ‘படத்தில் ஹீரோவாக நடித்தவர். ‘மேயாத மான் ‘, ‘மெர்க்குரி’ , ‘பூமராங்’ , ‘அறுபது வயது மாநிறம்’ படங்களின் நாயகி இந்துஜா இந்த படத்தில் துருவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் அருண் கார்த்திக்கிடம் கேட்டோம்.” இந்தப் படம் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும். வழக்கமான கதை கொண்ட படமல்ல என்பதைப் புரிந்துதான் நாயகன் , நாயகி இருவருமே நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இதில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகிறார். ஒரு ரகளையான கதாபாத்திரத்தில் ஷாரா நடிக்கிறார் .இவர் ‘மீசையை முறுக்கு’ , ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ , படங்களில் நடித்தவர் . அது மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் பிரபலமானவர். இப்படி சமூக ஊடகங்களில் புகழ் பெற்ற பலரும் இதில் நடிக்கிறார்கள் ” என்றார்.

நேற்று தொடங்கிய படப்பிடிப்பை 45 நாட்களில் முடிக்கும் திட்டத்தோடு மும்முரமாக இருக்கிறது ‘சூப்பர் டூப்பர்’ படக் குழு.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்:-
படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர் சுந்தர்ராம் கிருஷ்ணன் , இசையமைப்பவர் திவாகரா தியாகராஜன் . படத்தொகுப்பு வேல் முருகன், கலை இயக்கம் சூர்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here