பரபரப்பாக தயாராகிற சுய் தாகா ஹிந்தி படத்தில் மம்தா எனும் கதாபாத்திரத்தில் தையல் வேலைப்பாடு செய்யும் வருண் தவானின் மனைவியாக நடித்துள்ளார் அனுஷ்கா சர்மா.
கிட்டத்தட்ட 2 மாதத்திற்கும் மேலாக தையல் வேலைபாட்டினை கற்றுக்கொண்டதாக கூறியுள்ள அனுஷ்கா சர்மா, ”சுய் தாகா படம் மிகவும் வித்யாசமான படம். இது போன்ற படங்களில் நடிக்க எனக்கு ஆர்வம் அதிகம் உள்ளது.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார் அனுஸ்கா.
நடிகை அனுஷ்கா ஷர்மா திறமை வாய்ந்த நடிகை .தனது கடின உழைப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.2 மாத காலம் கடும் பயிற்சி எடுத்து படத்தில் நடித்துள்ளார் என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்த படம் முழுக்க முழுக்க சொந்தமாய் யாரையும் சார்ந்து இருக்காமல் நம் உழைப்பால் முன்னேறலாம் என்ற கருத்தினை கொண்ட படமாக அமைந்துள்ளது. மேலும் மகாத்மா காந்தி அவர்களின் வழியை பின்பற்றும் வகையில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் நம் நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்ற செய்தியையும் தெரிவிக்கிறது.
வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும்  படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குநர்  சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார்.மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.
‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘சுய் தாகா – மேட் இன் இந்தியா’ என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here