டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா என்ற பெண் 6 பேர் சேர்ந்த கும்பலால் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார்.இதில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பலியானார். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமான அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Image result for nirbhaya case

இந்த நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்கக்கோரி குற்றவாளிகள் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் “இது மிக கொடூர குற்றம் என்பதால் தூக்கு தண்டனையை குறைக்க முடியாது” என இந்த மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here