‘அடங்கமறு’ படத்தில் மகனோடு இணைந்து சண்டைப் பயிற்சி; ஸ்டன்ட் சிவா உற்சாகம்!

0
294
ஜெயம் ரவி, ராஷிகண்ணா நடிப்பில் உருவாகி, வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகவிருக்கிற படம் ‘அடங்கமறு.’
சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்ட் சிவா இந்த படத்தில் பணிபுரிந்த தனது அனுபவத்தைப் பகிர்கிறார்.
“ஜெயம் ரவியின் உடலமைப்பும், கோபக்கார இளைஞன் தோற்றமும் சண்டைப் பயிற்சியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இது எனக்கு மட்டுமல்ல, அவருடன் முந்தைய படங்களில் பணியாற்றிய ஒவ்வொரு சண்டைக்கலைஞருக்கும் வரம். ‘ஆக்‌ஷன்’ என்பது ஜெயம் ரவி திரைப்படங்களின் ஒரு இன்றியமையாத  பகுதியாக உள்ளது.
இது சினிமாவில் அவருடைய ஆரம்பகட்ட சினிமாக்களில் இருந்து எளிதாக கணக்கிட முடியும். இன்னும் குறிப்பாக, கடந்த ஒரு சில ஆண்டுகளில் வெளியான அவர் படங்களில் வந்த ஆக்‌ஷன் காட்சிகளைச் சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இது அடங்க மறு படத்தின் சண்டைக்காட்சிகளில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான விஷயங்களை வழங்கியே ஆக வேண்டிய சவாலை கொடுத்தது. கார்த்திக் தங்கவேலுவின் கதை, வித்தியாசமான விஷயங்களை கொடுக்க வாய்ப்பை கொடுத்தது. படத்தின் முழு கதையும் நாயகனின் புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான செயல்களை அடிப்படையாகக் கொண்டது. எனவே நாங்கள் திட்டமிட்டு அவற்றை செயல்படுத்தினோம்.
முக்கியமான விஷயம் என் மகன்கள் கெவின் குமார் மற்றும் இளைய மகன் ஸ்டீவன் குமார் ஆகிய இருவருமே கராத்தே சாம்பியன்கள். ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றவர்கள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தற்காப்புக் கலையை மையப்படுத்தி இருந்ததால், கெவின் அந்த காட்சிகளுக்கு உதவி சண்டைப்பயிற்சியாளராக வைத்துக் கொண்டேன். அந்தவகையில் என் மகன் சண்டைப் பயிற்சியாளராக அறிமுகமாகும் படம் என்பதாலும் அடங்கமறு என் இதயத்துக்கு நெருக்கமான படம்” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here