‘ஸ்ரீ காத்தாயி 108 போற்றி’ – சிலிர்ப்பூட்டும் இசைத் தொகுப்பு!

0
81

 

‘ஸ்ரீ காத்தாயி 108 போற்றி’ சிலிர்ப்பூட்டும் இசைத் தொகுப்பு!

 

🔔நாகை மாவட்டம் – கீழையூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு காத்தாயி அம்மனைப் போற்றி திரு. தொழுதூர் (லேட்) சுந்தரேச ஐயர் அவர்கள் எழுதிய ‘ஸ்ரீ காத்தாயி 108 போற்றி’ நாமங்களை, ‘தேவார இசைமணி’ திருமதி விஜயலெஷ்மி ராஜாராமன் அவர்கள் இசையமைத்துப் பாட, அந்த இசைத் தொகுப்பு காணொளி(Video)யாக யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது: பார்க்கவும், கேட்கவும் தயாராகி விட்டது.

🔔இனிமையிலும் இனிமையான குரல், பாடல் வரிகள் துல்லியமாய் கேட்கும்படியான உச்சரிப்பு, கேட்கக் கேட்க பக்திப் பரவசம் கூட்டும் இசை என இசைத் தொகுப்பு சிலிர்ப்பூட்டுகிறது!

🔔காணொளிக் காட்சியின் துவக்கத்தில் காத்தாயி அம்மன் கோயிலை சுற்றிக் காண்பிப்பது, பாடல் ஒலிக்க ஒலிக்க லிரிக்கல் வீடியோ பாணியில் பாடல் வரிகளைக் காண்பிப்பது என அத்தனையும் நேர்த்தி!

🔔பாடலோடு பாடல் வரிகளும் ஒளிபரப்பாவதால் தொடர்ச்சியாக சில நாட்கள் பார்த்தாலே ஸ்ரீ காத்தாயி 108 போற்றி மனதில் பதிந்து விடுமென்பது உறுதி!

🔔மேற்கண்ட இசைத் தொகுப்பை ‘தேவார இசைமணி’ திருமதி. விஜயலெஷ்மி அவர்களும், அவருடைய கணவர் திரு. ராஜாராமன் அவர்களும் இணைந்து 100 % ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் உருவாக்கியிருப்பதை உணர முடிகிறது!

-சு. கணேஷ்குமார்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here