விஷால் நடிப்பில் இரண்டாம் பாகத்தில் அடியெடுத்து வைக்கும் படம் சண்டக்கோழி 2.லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் குறித்து வரலட்சுமி தனது அனுபவத்தை தெரிவிக்கையில், “சண்டக்கோழி2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி2-வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியேவந்து நான் நடித்துள்ளேன். நாங்கள் திண்டுக்கல் , காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம்.Image result for வரலட்சுமி சண்டகோழி

கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும். படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது” என்றார்.Image result for வரலட்சுமி சண்டகோழி

விஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 வருகிற அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் முதல் பாகத்தில் நடித்த  ராஜ் கிரண் நடித்துள்ளார். முன்னதாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here