இன்றைய ராசிபலன் 9. 10. 2019 -ஜோதிட ரத்னா வெ. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388

0
1066

ன்றைய ராசிபலன் 9. 10. 2019

#aries_மேஷம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

#taurus_ரிஷபம்

இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

#gemini_மிதுனம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது உத்தமம்.

#cancer_கடகம்

இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு காலை 09.41 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை கையாளும் போது நிதானமாக இருப்பது உத்தமம்.

#leo_சிம்மம்

இன்று தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

#virgo_கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

#libra_துலாம்

இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

#scorpio_விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பொன் பொருள் சேரும்.

#sagittarius_தனுசு

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

#capricorn_மகரம்

இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.

#aquarius_கும்பம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

#pisces_மீனம்

இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here