இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் 5. 1. 2019 -ஜோதிட ரத்னா வி. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388

0
882

இன்றைய பஞ்சாங்கம்

🌷05-01-2019, மார்கழி 21, சனிக்கிழமை, நாள்முழுவதும் அமாவாசை திதி. மூலம் நட்சத்திரம் பகல் 03.07 வரை பின்பு பூராடம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. ஹனுமன் ஜெயந்தி

🌷இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00

இன்றைய ராசிபலன்

🌻aries-மேஷம்

இன்று உங்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

🌻taurus-ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.

🌻gemini-மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

🌻cancer-கடகம்

இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வேலையில் பணிச்சுமை குறையும்.

🌻leo-சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலனை அடையலாம்.

🌻virgo-கன்னி

இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். புத்திர வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு ரீதியாக சாதகமான பலனை பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

🌻libra-துலாம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் லாபகரமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். கொடுத்த கடன்கள் வசூலாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

🌻scorpio-விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

🌻sagittarius-தனுசு

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பை கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

🌻capricorn-மகரம்

இன்று நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.

🌻aquarius-கும்பம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.

🌻pisces-மீனம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here