இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் 30. 4. 2019 -ஜோதிட ரத்னா வெ. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388

0
1467

இன்றைய ராசிபலன்

🌻aries-மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் இருந்த தடை தாமதங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும்.

🌻taurus-ரிஷபம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.

🌻gemini-மிதுனம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வண்டி வாகனங்களால் எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

🌻cancer-கடகம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது.

🌻leo-சிம்மம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்விக்கான வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறையும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.

🌻virgo-கன்னி

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

🌻libra-துலாம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றத்துடன் கூடிய உயர்வுகள் கிடைக்கும்.

🌻scorpio-விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

🌻sagittarius-தனுசு

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு விரிவடையும். சேமிப்பு உயரும்.

🌻capricorn-மகரம்

இன்று பிள்ளைகளால் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

🌻aquarius-கும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

🌻pisces-மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய சற்று யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வியாபாரத்தில் இதுவரை வராத பாக்கிகள் வசூலாகும்.

🌺30-ஏப்ரல்-2019
சூரியோதயம் : 6:03 am சந்திரௌதயம் : 02:57 AM
சூரியாஸ்தமனம் : 6:30 pm சந்திராஸ்தமனம் : 02:59 PM
சூரியன்ராசி : மேஷம்
சந்திரன்ராசி : மீனம்
மாதம் : சித்திரை
பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம்

🌷வாரம் : செவ்வாய்
திதி : ஏகாதசி இறுதி 12:17 am துவாதசி
நட்சத்திரம் : சதயம் இறுதி 08:55 am பூரட்டாதி
யோகம் : ஐந்திரம் இறுதி 05:10 am
கரணம் :பவம் 11:13 am
பாலவம் 12:17 am
கௌலவம் 12:17 am
நல்ல நேரம்
அபிஜித் : 11:52 am – 12:41 pm

அமிர்த காலம் : 12:10 am 01:57 am
ஆனந்ததி யோகம் : 08:15 am

ராகுகாலம் : 2:59 PM – 4:15 PM
யம கண்டம் : 9:52 AM – 11:08 AM
தியாஜ்யம் : 15:21 pm – 17:07 pm
குளிகன் : 12:25 PM – 1:42 PM
துர்முஹுர்த்தம் : 1. 09:21 AM – 10:02 AM
2. 11:03 PM – 11:58 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here