இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் 27. 2. 2019 -ஜோதிட ரத்னா வெ. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388

0
768

இன்றைய பஞ்சாங்கம்

🍁27-02-2019, மாசி 15, புதன்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 12.45 வரை பின்பு மூலம். சித்தயோகம் பின்இரவு 12.45 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். தனிய நாள். புதியமுயற்சிகளையும் பயணங்களையும்
தவிர்க்கவும்.

🍁இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிபலன்

💐மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.

💐ரிஷபம்

இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.

💐மிதுனம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

💐கடகம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

💐சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

💐கன்னி

இன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப் படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.

💐துலாம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

💐விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.

💐தனுசு

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

💐மகரம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

💐கும்பம்

இன்று நீங்கள் திட்டமிட்ட காரியத்தை செய்து முடிக்க சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

💐மீனம்

இன்று உங்கள் பொருளாதார நிலையும், ஆரோக்கியமும் சற்று மந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here