இன்றைய ராசிபலன் 20. 5. 2019

0
1613

இன்றைய ராசிபலன் 20. 5. 2019

மேஷம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று மாலை புண்ணியத் தலங்களை தரிசிக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: ரிஷப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று மன அமைதி குறையலாம். கடந்த கால உழைப்பிற்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறுக்கிட்டாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

கடகம்: முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். காரியங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமைப்படக்கூடிய செய்தி கிடைக்கும். சகோதரர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது சற்று தள்ளிப் போகும். மாலையில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

சிம்மம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், அதிகரிக்கும் செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் வாங்கவும் நேரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

கன்னி: இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அறிவுப் பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத வாகன யோகம் உண்டாகும்.

விருச்சிகம்: உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் செல்ல நேரிடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

தனுசு: இன்று மனதில் ஏதாவது கவலை தோன்றும், உறவினர்கள் உதவி கேட்டு தொல்லைப்படுத்துவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். வருமானம் சீராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகரம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். ஆனாலும், வீண் செலவுகள் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சிலருக்கு குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்: இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், மற்றவர்களிடம் சிறிய அளவில் கடன் வாங்க நேரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

மீனம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here