இன்றைய ராசிபலன் 19. 5. 2019 -ஜோதிட ரத்னா வெ. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388

0
1383

இன்றைய ராசிபலன்

🌺aries-மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.

🌺taurus-ரிஷபம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

🌺gemini-மிதுனம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருள் வாங்குவீர்கள்.

🌺cancer-கடகம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் உறவினர்கள் உதவியால் சற்று குறையும்.

🌺leo-சிம்மம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெரியவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும்.

🌺virgo-கன்னி

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும்.

🌺libra-துலாம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். நெருங்கியவர்கள் வகையில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

🌺scorpio-விருச்சிகம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

🌺sagittarius-தனுசு

இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

🌺capricorn-மகரம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

🌺aquarius-கும்பம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

🌺pisces-மீனம்

இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்கள் வாயிலாக மனநிம்மதி குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here