இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் 19. 10. 2018 -ஜோதிட ரத்னா வி. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388

0
496

🌸19-10-2018, ஐப்பசி 02, வெள்ளிக்கிழமை, தசமி திதி மாலை 05.57 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 03.24 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. விஜய தசமி. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

🌷aries-மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலையில் பணிச்சுமை குறையும்.

🌷taurus-ரிஷபம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

🌷gemini-மிதுனம்

இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.01 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியாக இதுவரை இருந்த பிரச்சினை படிப்படியாக குறையும்.

🌷cancer-கடகம்

இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 02.01 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

🌷leo-சிம்மம்

இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

🌷virgo-கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

🌷libra-துலாம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

🌷scorpio-விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை தரலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

🌷sagittarius-தனுசு

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

🌷capricorn-மகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.

🌷aquarius-கும்பம்

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சனை சற்று குறையும்.

🌷pisces-மீனம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here