இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் 18. 1. 2019 -ஜோதிட ரத்னா வெ. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388

0
679

இன்றைய பஞ்சாங்கம்

🌹18-01-2019, தை 04, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி இரவு 08.22 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. ரோகிணி நட்சத்திரம் பகல் 12.25 வரை பின்பு மிருகசீரிஷம். மரணயோகம் பகல் 12.25 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது🌹

🌹இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00🌹

இன்றைய ராசிபலன்

🍁aries-மேஷம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வெளி வட்டார நட்பு கிட்டும். கடன்கள் குறையும்.

🍁taurus-ரிஷபம்

இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

🍁gemini-மிதுனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

🍁cancer-கடகம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

🍁leo-சிம்மம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

🍁virgo-கன்னி

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.

🍁libra-துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

🍁scorpio-விருச்சிகம்

இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை குறையும்.

🍁sagittarius-தனுசு

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

🍁capricorn-மகரம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

🍁aquarius-கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

🍁pisces-மீனம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினை குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here