இன்றைய ராசிபலன் 17. 6. 2019 -ஜோதிட ரத்னா வெ. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388

0
388

இன்றைய ராசிபலன்

🍁aries-மேஷம்

இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 10.43 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

🍁taurus-ரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 10.43 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

🍁gemini-மிதுனம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய பொருள் வாங்குவீர்கள்.

🍁cancer-கடகம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

🍁leo-சிம்மம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

🍁virgo-கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.

🍁libra-துலாம்

இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் ரீதியாக வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும்.

🍁scorpio-விருச்சிகம்

இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

🍁sagittarius-தனுசு

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.

🍁capricorn-மகரம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். சுப காரியங்கள் கைகூடும்.

🍁aquarius-கும்பம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வங்கி சேமிப்பு உயரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

🍁pisces-மீனம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here