இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் 17. 2. 2019 -ஜோதிட ரத்னா வெ. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388

0
1032

இன்றைய பஞ்சாங்கம்

🍁17-02-2019, மாசி 05, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 08.10 வரை பின்பு திரியோதசி பின்இரவு 04.50 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 04.45 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

🍁இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00

இன்றைய ராசிபலன்

💐மேஷம்

இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.

💐ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் பாதிப்புகள் குறையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.

💐மிதுனம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

💐கடகம்

இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

💐சிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் பெண்கள் வழியில் அனுகூலப் பலன் உண்டாகும்.

💐கன்னி

இன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். செலவுகள் குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளில் நற்பலன்கள் உண்டாகும்.

💐துலாம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்தில் குறைவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் கொடுத்த கடன்கள் வசூலாகும்.

💐விருச்சிகம்

இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு பகல் 11.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

💐தனுசு

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.23 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை.

💐மகரம்

இன்று இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.

💐கும்பம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

💐மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here