தமிழக மக்கள் எழுச்சி உருவான பிறகு அரசியலுக்கு வருகிறேன்! -ரஜினிகாந்த் அதிரடி முடிவு!

0
406

விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் 12.3.2020 அன்று காலை 10. 30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவரின் பேச்சு துளிகளில் இங்கே…

ஏமாற்றம் என நான் குறிப்பிட்டது என்ன என்பது குறித்தும் கட்சி குறித்த கண்ணோட்டம் பற்றியும் தெரிவிக்கவே இந்த சந்திப்பு.

தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் என நான் சொன்னது பலவிதமாக வெளியே வந்தன; மாவட்ட செயலாளர்கள் மூலம் எதுவும் வெளியே வரவில்லை.

சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது.

பலர் கட்சிப் பதவியை தொழிலாக வைத்துள்ளனர்.

1996 ல் எனக்கு வந்த வாய்ப்பை நான் ஏற்கவில்லை.

அரசியலுக்கு வருகிறேன் என 2017 டிசம்பருக்கு முன்பு நான் சொன்னதில்லை.

1996ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக நான் சொன்னதாக சொல்வது தவறு.

நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

60 முதல் 65 சதவீதம் ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு

புதியவர்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல நான் பாலமாக இருப்பேன்

30 முதல் 35 சதவீதம் பல்வேறு துறை நிபுணர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை.

முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது.

நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

என் முடிவை மாவட்ட செயலாளர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தலைவன் சொல்வதை கேட்பவனே தொண்டன். இதை தான் ஏமாற்றம் என கூறினேன்.

பதவிக்கு ஆசை இல்லையென 2017ல் தான் பேசியதை சுட்டிக்காட்டிய ரஜினிகாந்த் – ரஜினிகாந்த்

அசுர பலத்துடன் இருக்கும் திமுக & அதிமுக என்ற இரு ஜாம்பவான்களை நாம் எதிர்க்கப் போகிறோம்.

கருணாநிதி & ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் இல்லை. எனவே தான் வெற்றிடம் இருக்கிறது என்பதை தெரிவித்தேன்.

தமிழக மக்கள் எழுச்சி உருவான பிறகு அரசியலுக்கு வருகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here