யானை மேலிருந்து கீழே விழுந்த ‘பிக்பாஸ்’ ஆரவ்; ‘ராஜபீமா’ படப்பிடிப்பில் பரபரப்பு!

0
210
மீடியாக்களின் கவனம் சின்னத்தம்பி என்கிற யானை மீது இருக்க , தற்போது தாய்லாந்தில்  அறிமுக  இயக்குனர் நரேஷ் இயக்கத்தில், ‘பிக்பாஸ்’ ஆரவ் யானையுடன் நடிக்கும் ‘ராஜபீமா’ படத்தின் செய்திகள் கவனம் ஈர்க்கிறது.
ராஜபீமா படத்தில் நடிகர் ஆரவுடன் பீட்டர் என்ற யானையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.  படத்தின் முக்கியமான காட்சிகளை இப்போது தாய்லாந்தில் எடுத்துக் கொண்டிருக்கும் குழுவினர் அதற்கு முன்னதாக ஒரு சில காட்சிகளை பொள்ளாச்சியிலும் படம் பிடித்தனர்.
கடந்த ஓரு வாரமாக தாய்லாந்து நாட்டிலுள்ள  கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் ஓங்கி வளர்ந்த ராட்சச மரங்கள் இடையேயும்  படமாக்கி வருகின்றனர்.
 யானை சம்மந்தப்பட்ட காட்சிகளைப் படம் பிடித்தபோது, ஆரவ் யானை மேலிருந்து கீழே விழுந்துள்ளார். படப்பிடிப்புக் குழுவினர் முதலுதவிக்காக மருத்துவரை வர வைப்பதற்குள், கட்டுமஸ்தான உடல் வலிமையும், மனதிடமும் கொண்ட  ஆரவ் கீழே விழுந்து அடிபட்ட வலியை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து நடித்துள்ளார்.
“இந்த சம்பவம்  ஆரவ் நடிப்பு மீது  எத்தனை  அர்ப்பணிப்போடு இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.  தாய்லாந்தில் ஷூட்டிங் முடிய இன்னும் ஒரு வாரகாலம் ஆகும். அதன்பின் சென்னையில் படத்தின் கிளமாக்ஸ் காட்சிகள் எடுக்கவுள்ளோம். இந்த படம் கோடை விடுமுறை விருந்தாக ரிலீஸாகும்” என்றார் தயாரிப்பாளர்  ‘சுரபி பிலிம்ஸ்’ எஸ். மோகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here