கதையை மட்டுமே நம்பி படம் எடுத்து வெற்றிப் பாதையில் பயணிக்கிற தயாரிப்பாளர்களில் ஒருவர் ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ ஜி.டில்லிபாபு.
வரும் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் அவரின் ‘ராட்சசன்’ படத்தை பற்றிய நல்ல செய்திகள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. அதனால் மகிழ்ச்சியாக இருக்கிற தயாரிப்பாளர் டில்லிபாபு, “ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எப்போழுதும் நடிகர்களை தேர்வு செய்வதற்கு முன்னரே, வலுவான கதைகளை தேர்வு செய்து வருகிறது. அதே வகையில் தான் ராட்சசன் படத்தையும் தேர்வு செய்தோம்.
நான் ஒரு தீவிர கிரைம் நாவல் வாசகர் என்பதால், ராம்குமார் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர் சொன்னதை விட, படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார். ராட்சசன் யதார்த்த அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு கமெர்சியல் திரைப்படம், அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்களை யூகிக்க வைத்துக் கொண்டே இருக்கும். எங்களுக்கு நெருக்கமான சிலருக்கு படத்தை திரையிட்டு காண்பித்தபோது, ஒரே குரலாக அனைவருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது” என்றார்.
மேலும் அவர், “நாயகன் விஷ்ணு விஷால் தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்ய, நிறைய உழைத்தார். ஆராய்ச்சி செய்தார். தனது கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க, அவரது தந்தையிடம் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார். அமலா பால் இதுவரை நடித்த படங்களை தாண்டி, அவரது சிறந்த படமாக இந்த படம் இருக்கும். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ் ஆகியோர் இந்த படத்தில் இணையற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜிப்ரான் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here