புதிய தலைமுறையின் ‘கிச்சன் கேபினட்’டில் ‘பச்சைக்கிளி’யும் ‘குடைமடக்கி’யும்!

அரசியல் நிகழ்வுகளை எவருடைய மனதும் புண்படாதபடி நையாண்டி செய்கிற நிகழ்ச்சி ‘கிச்சன் கேபினட்.’

தினமும் இரவு 10:00 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிற இந்த நிகழ்ச்சியில் இரண்டு புதிய நகைச்சுவை பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள்.‘பச்சைக் கிளி’ என்கிற பெண் மேடைப் பேச்சாளரும், ‘குடை மடக்கி’ என்கிற அவருடைய உதவியாளரும் நாட்டு நடப்புகளை நகைச்சுவையாக மேடைப் பேச்சு வடிவில் வழங்குகிறார்கள்.

தேர்ந்த அனுபவமுள்ள எழுத்தாளர்கள் இவர்களுடைய பேச்சுகளைத் தயாரிக்கிறார்கள். எவரையும் நேரடியாக நையாண்டி செய்யாமல் சிரிப்பும், சிந்தனையும் கலந்த பேச்சாக இருக்க வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here