‘புலிக்கொடி தேவன்’ சினிமா விமர்சனம்

0
710

சாதிவெறியால் சின்னாபின்னமாகும் காதலை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் இன்னொரு படம்.

அந்த மேல்சாதி குடும்பத்துப் பெண்ணுக்கும் கீழ்சாதி இளைஞனுக்கும் காதல் மலர்கிறது. சாதிவெறி பிடித்த பெண்ணின் அப்பா, குடும்ப கெளரவம் கெட்டுவிடும் என்பதைக் காரணமாகச் சொல்லி குடும்பத்தின் சம்மதத்தோடு தன் மகளைக் கொன்று விடுகிறார். காதலியைப் பறிகொடுத்த அந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்படுகிறான்.

கதையில் இது ஒரு டிராக்.

ஊரில் பெரிய மனிதர் அவர். சாதியில் உயர்ந்தவர். அவரது தங்கையை கீழ்சாதி இளைஞன் ஒருவன் காதலிக்கிறான். பெண்ணுடைய அண்ணனின் சாதிவெறி இந்த காதலர்களை என்ன செய்தது என்பது கதையின் இன்னொரு டிராக்.

இரண்டு கதைக்குமான தொடர்பு என்ன? திரைக்கதை பதில் சொல்கிறது. இயக்கம்: எஸ்.பி. ராஜ்பிரபு

இந்த படத்தின் கதைப்படி எது மேல்சாதி என்பது படத்தின் தலைப்பில் இருக்கிறது.

மைக்கேல் சசிகுமார் அமலா மரியா, குணா கிருத்திகா… நாயகர்கள் நடிப்பில் வெளிப்படும் அப்பாவித்தனம், நாயகிகளின் நடிப்பில் வெளிப்படும் குழந்தைத்தனம் கதாபாத்திரத்துக்கு பலம்!

பெருத்த தேகம் – முறுக்கு மீசை என கம்பீரமான தோற்றத்தில் வேலா. கிருஷ்ணசாமி. புலிக்கொடி தேவனாக, சாதிவெறியில் ஊறிப்போனவராக தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே.

நாயகன் குணாவின் அண்ணனாக அருள் அன்பழகன். ‘நானும் உன் சாதிக்காரன்தான். உனக்கு இருக்கிற அதே திமிர் எனக்கும் இருக்கும்’ என புலிக்கொடி தேவனிடம் எகிறிக்கொண்டிருப்பது கெத்து!

ஜீவன் மயில் இசையில் ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கள்ளி என் கள்ளி’ பாடல்கள் இனிமை.

ஒளிப்பதிவு நேர்த்தி.

காமெடி காட்சிகளுக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here