புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி (Patrician Marathon 2019); சென்னை பெட்ரிஷியன் கல்லூரியின் ஏற்பாட்டில் நடந்தது!

0
312

புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாரத்தான் போட்டி (Patrician Marathon 2019); சென்னை பெட்ரிஷியன் கல்லூரியின் ஏற்பாட்டில் நடந்தது!

சென்னை அடையாரிலுள்ள பெட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாரத்தான் ஓட்டமானது 10.2.2019 அன்று காலை ‘பெட்ரிஷியன் மாரத்தான் – 2019’ என்ற பெயரில் புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டமாக நடந்தது.இந்த மாரத்தான் போட்டியை கல்லூரியின் தாளாளர் டாக்டர். ஜான்சன் ரெக்ஸ் தனபால் அவர்கள் தொடங்கி வைத்தார்.
21k, 10k, 5k என்ற மூன்று பிரிவுகளில் மேற்கண்ட ஓட்டம் நடந்தது.
இந்த மாரத்தான் ஓட்டம் மூலம் திரட்டப்படும் நன்கொடைகள் ‘ஜீவோதயா இல்லம்’ மற்றும் சென்னை ‘அடையாறு புற்றுநோய் மையம்’ இரண்டுக்கும் வழங்கப்படுகிறது!இந்த விழாவில் ஐ.பி.எஸ். அதிகாரி தமிழ்நாடு சிறைத்துறை கூடுதல் காவல் இயக்குநர் அசுதோஷ் சுக்லா கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி கெளரவித்தார்.கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஏ.ஜோசப் துரை, துணை முதல்வர் டாக்ட்ர. கீதா ரூபஸ், ஆசிரியர்கள், மாணவர்கள், போட்டியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்று ‘பெட்ரிஷியன் மாரத்தான் – 2019’நிகழ்ச்சியை சிறப்பித்தனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here