நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு பெட்ரிசியன் கல்லூரியின் கொரோனா நலத்திட்ட உதவிகள்! அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் வழங்கினார்!

0
55

நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு பெட்ரிசியன் கல்லூரியின் கொரோனா நலத்திட்ட உதவிகள்! அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் வழங்கினார்!

சென்னை, அடையார் பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக, உணவுத் தேவைக்கு சிரமப்படும் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சென்னை திருவான்மியூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். ஊசி மணி, பாசி மணி விற்றல், சிறு சிறு சீப்பு, சோப்பு டப்பா, கண்ணாடி, பொட்டு போன்றவை விற்கும் மிக மிகச் சிறிய தொழில்கள், பழம் பொருட்கள் சேகரித்து விற்பது போன்ற மிகக் குறைவான வருவாய் தரும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையின்றி பசி, பஞ்சம், பட்டினியோடு நாட்களை நகர்த்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அப்படி வறுமையில் வாடும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, மிளகாய், தனியா, எண்ணெய், ரவை, கோதுமை மாவு, மசாலா பொருட்கள், சோப்பு, பிஸ்கட் என மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் 250 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

பெட்ரிசியன் கல்லூரியின் இயக்குநர் அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நலத்திட்ட நிகழ்வில் சமுதாய மக்கள் கலந்து கொண்டு ஒரு மாதத்திற்குத் தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டனர்.

இந்த நலத்திட்ட நிகழ்ச்சியை அடையார் J2 காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு.கிறிஸ்டின் ஜெயசில் மற்றும் காவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் அரசாங்கம் வழிகாட்டிய சமூக இடைவெளியின்படி நடத்திக் கொடுத்தனர்.

பெட்ரிசியன் கல்லூரி நிர்வாகத்திற்கும் அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் அவர்களுக்கும் நரிக்குறவர் சமுதாயப் பயனாளிகள் தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here