‘பார்ட்டி’, ‘சார்லி சாப்ளின் 2’ இவை இரண்டும் அம்மா கிரியேசன்ஸ் டி. சிவா மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்த படங்கள்.

இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு வியாபாரத்திற்கு உதவியாகவும் அமைந்திருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கி இருக்கும் பார்ட்டி படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் இருப்பதாலும் இயக்குநரின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றிருப்பதாலும் வியாபார ஆதரவு கிடைத்திருக்கிறது.

அதே மாதிரி இன்னொரு படமான சார்லி சாப்ளின் 2 படத்திற்கும் கிடைத்திருக்கிறது. காரணம் ஷக்தி சிதம்பரம் ஏற்கெனவே இயக்கி வெற்றி பெற்ற சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் நடித்த அதே பிரபுதேவா பிரபு  உட்பட பல நட்சத்திரங்கள் இதில் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்பதும் தான்.

அது மட்டுமில்லாமல் கமர்ஷியல் இயக்குநராக உலகம் அறிந்தவர் ஷக்திசிதம்பரம். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள்  அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

இப்படியான காரணங்களால் இந்த இரண்டு படங்களின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கி இருக்கிறது.

அம்மா கிரியேசன்ஸ் தயாரித்த பல படங்களையும் ஷக்தி சிதம்பரம் இயக்கி தயாரித்த பல படங்களையும் வெங்கட் பிரபுவின் பல படங்களையும் வாங்கிய சன் டிவி நிறுவனம் இந்த படங்களையும் வாங்கி இருப்பதால் பார்ட்டி, சார்லி சாப்ளின் 2 படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here