கலை என்பது சமூகத்தின் அடியாழத்தில் விழிப்பூட்டுவதற்கான மாபெரும் தத்துவம். அது கலைஞனின் ஆழ்மனதில் இருந்து தன் அகந்தையைத் துறந்து தன் நலத்தை கைவிட்டு, கழிவிறக்கங்களுக்கும் காழ்ப்புணர்ச்சிகளுக்குமெல்லாம் அப்பாற்பட்டு லயத்தோடு மனம் என்கிற பெருவெளியில் உறவாடும் வழியே பிறப்பிக்கப்படும். அது கலைஞனின் கையிலும் இல்லை.

அங்கனம் மெய்யை தரிசனம் செய்ய விழிப்பு அவசியம். கலைஞனாக அந்த வரலாற்று விழிப்பும், சமகால கலைஞனாக கூடுதலான அரசியல் விழிப்பும் அவசியமாகிறது. அப்படியொரு அரசியல் விழிப்போடு சினிமாவை அணுகி வரும் இயக்குநர் பா.ரஞ்சித், தொடர்ந்து திரைக்கலைஞர்கள் வாசிப்பு தளத்திலும் இயங்க வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கிய கூகை திரைப்பட இயக்கம் மற்றும் நூலகத்தில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.


புத்தகம் பேசுது (பாட்டு) – பேராசிரியர் காளீஸ்வர்
பருவம் நாவல் – எழுத்தாளர் ஜா.தீபா
நிலமெல்லாம் ரத்தம் – இயக்குநர், தயாரிப்பாளர் கஸாலி
இமையம் எழுதிய ‘கோவேறு கழுதைகள்’ – மாணவர் தினேஷ்
வானம் வசப்படும் நாவல் – ஊடகவியலாளர் அதீஷா
இன்குலாப் கவிதைகள் – கவிஞர் விடுதலை சிகப்பி
கட்டுரைத் தொகுப்பு: நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் இலக்கிய உள்ளீடும் காட்சி வெளியீடும் – ஊடகவியலாளர் சிவசங்கர்.
புத்துயிர்ப்பு இவான், – எழுத்தாளர் கரன் கார்க்கி
நா.முத்துக்குமார் கவிதைகள் – பாடலாசிரியர்வேல் முருகன்
வாடாமல்லி – தோழர் நேசமணி
கூகை – இதழியல் மாணவர் சோ. விஜய குமார்
சுல்தானாவின் கனவு – தோழர் சபரிதா
கிராமத்து தெருக்களின் வழியே – பதிப்பாளர் வேடியப்பன்
தீண்டாத வசந்தம் – உதவி இயக்குநர் சரவணன்
மண்ட்டோ கதைகள் – இயக்குநர் பொன்னுசாமி
இயக்கவியல் பொருள் முதல் வாதமும், வரலாற்று பொருள் முதல் வாதமும் – தோழர் மதன் அறிவழகன்
காடோடி ஓநாய் குலச்சின்னம் மேக்நாட் சாகா – எழுத்தாளர் ஏ.சண்முகானந்தம்.
கிழவனும் கடலும் ஒரு மனுஷி அவன் காட்டை வென்றான் – தோழர் விக்னேஷ் பவித்ரன்.
மீட்சி – தோழர் ஓவியா அன்புமொழி
சேப்பியன்ஸ் – முருகன் மந்திரம்
செடல், தோப்பு கருப்பசாமி அய்யா – மகிழ்ச்சி ஆ.ராம்குமார்
கூளமாதாரி பீக்கதைகள் – மாணவர் விஜயகுமார்.
அழிந்து வரும் கலாச்சாரம் – பேராசிரியர் அண்ணாதுரை.
பிரபஞ்சன் சிறுகதைகள் மரநாய் கவிதை தொகுப்பு – இயக்குநர் தமயந்தி.
யாசகம் – பேராசிரியர் மஞ்சுளா.
பெத்தவன் மையிழைக் கறைகள் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் – அகர முதல்வன்.
கீரனூர் ஜாகீர் ஷா சிறுகதைகள் – இயக்குநர் அமீர் அப்பாஸ்.
எல்லா நதியிலும் என் ஓடம் – லெனின்ஷா மஜித்.
வண்ணநிலவன் சிறுகதை பலாப்பழம் – தோழர் ராஜன்.