நயன்தாரா நடிப்பில் வெளிவரவிருக்கிற, மிகவும் எதிர்பார்க்கப்படுகிற கோலமாவு கோகிலா படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள ‘கல்யாண வயசு’ பாடலுக்கு அனிருத்தின் இசை அழகியலை கொடுத்து இருக்கிறது. சிவகார்த்திகேயன், அனிருத், நடன இயக்குநர் சதீஷ் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் பங்கு பெற்ற அந்த பாடலுக்கான வீடியோ வடிவிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் அதன் எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் எகிறியது.

விவேக் பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் குரலில் வெளியான முதல் தனிப்பாடலான ‘எதுவரையோ’ ஏற்கனவே யூ டியூபில் மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது வானொலி நிலையங்களின் கீதமாகவும், எல்லோருடைய பிளே ஸ்ட்களிலும் முக்கிய இடத்தை பிடித்த பாடலாக இருப்பதும் குறிப்பிடத்தகுந்த அம்சம்.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே அனிருத் இசையமைப்பில் பின்னணி பாடகராக தன்னை நிரூபித்த நிலையில், ‘கல்யாண வயசு’ பாடலில் சிவகார்த்திகேயன்-அனிருத் இணை புதிய பரிமாணத்தை நிரூபித்து, இசை அட்டவணையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here