புதுச்சேரியில் தனி முத்திரை பதித்த திறமையாளர்கள்; அங்கீகரித்துக் கொண்டாடிய நியூஸ் 18 தமிழ்த் தொலைக்காட்சி!

0
194

புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மனிதர்களைக் கொண்டாடும் விதமாகநியூஸ் 18 தமிழ்த் தொலைக்காட்சி, சிகரம் விருதுகள் என்ற பெயரில் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறதுஅதன்படி 2019ம் ஆண்டுக்கான சிகரம் விருதுகள் வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள ஆனந்தா இன் ஹோட்டலில் கடந்த ஆகஸ்ட் 30 அன்று மாலை நடைபெற்றது.

புதுச்சேரியில் தனி முத்திரைப்பதித்த திறமையாளர்களை அங்கீகரித்து கொண்டாடிய இந்த சிகரம் விருதுகள் விழாவில்சிறந்த சமூக சேவகர்விவசாயிவிளையாட்டு வீரர்அரசுப்பள்ளிஅரசு மருத்துவர்கலைக்குழுதொழில்முனைவோர்கிராமம்விருந்தோம்பல்கல்வியாளர்ப்ரெஞ்ச் கலாச்சார மேன்மை ஆகிய பல்துறைகளில் தேர்வு செய்யப்பட்ட சாதனையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

அதன்படி சிறந்த விவசாயிக்கான சிகரம் விருதை ஸ்ரீலட்சுமிவிளையாட்டு வீரருக்கான விருதை சாய் பிரனிதாசிறந்த தொழில் முனைவோருக்கான விருதை எம்.அப்துல்காதர்சிறந்த கல்வியாளருக்கான விருதை ஜெ.கிருஷ்ணமூர்த்திஆர்.அனிதா ஆகியோரும் பெற்றனர்.

அதேபோல்சிறந்த விருந்தோம்பலுக்கான விருது காஷா கி ஆஷா கஃபே நிறுவனத்தாருக்கும்கலைக்குழுவுக்கான விருது ராஜப்பா கலைக்குழுவுக்கும்சிறந்த மருத்துவருக்கான விருது டாக்டர்.எஸ்.ராமசுப்ரமணியத்துக்கும் விருது வழங்கப்பட்டதுசிறந்த சமூக சேவைக்கான விருது உயிர்த்துளி அமைப்பினருக்கும்சிறந்த அரசுப்பள்ளிக்கான விருது பனித்திட்டு அரசு உயர்நிலைப்பள்ளிக்கும்சிறந்த கிராமத்துக்கான விருது தொண்டமாநந்தம் கிராமத்துக்கும்வழங்கி கெளரவிக்கப்பட்டது.

புதுவையின் மரியாதைக்குரிய மனிதர்களை கெளரவிக்கும் வகையில் நடந்த இந்த விழாவில்புதுவை முதல்வர் நாராயணசாமிஅமைச்சர்கள்கல்வியாளர்கள்திரையுலக பிரபலங்கள்வர்த்தக சங்க நிர்வாகிகள்தொழிலதிபர்கள்சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சிகரம் விருதுகள் நிகழ்ச்சி தொகுப்பு செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஞாயிறுகிழமை இரவு 7:00 மணிக்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here