தமிழ் சினிமாவில் Sci-fi திரில்லர் படங்கள் சமீபமாக வெளிவருகின்றன.அந்த வரிசையில் விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவிருக்கும் படம் ‘நகல்’.
இயக்குநர் A.R.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் சிவசக்தி ஹீரோவாகவும் மும்பை மாடல் ரிஷ்மா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். ரிஷ்மா பல குறும்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sci-fi த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க தமிழின் முன்னனி நடிகர்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படபிடிப்பு இன்று காலை சென்னையில் மங்களகரமான பூஜையுடன் துவங்கியது.
இந்த பூஜையில் இயக்குனர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர் , ஒளிப்பதிவாளர் நட்டிநட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஜுலை 9ஆம் தேதி இப்படத்தின் படபிடிப்பு துவங்கி 40நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.படத்தின் 75% படபிடிப்பு சென்னையிலும், மீதம் உள்ள படபிடிப்பு வெளிநாடுகளிலும் உருவாகவுள்ளது. இதில் மெடிக்கல் ரீதியான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனர் குழுவினர். பாடல்கள் ஊட்டியில் உருவாகவுள்ளது.

S2S பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த ‘நகல்’ படத்தில் F.s.பைசல் இசையமைக்கிறார்.இந்தப் படத்திற்கு ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவு செய்ய ஸ்டன் சிவா படத்துக்கான ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.மணிவர்மா மற்றும் ஷரன் சந்தரம் ஆகியோர் கலையை கவனிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here