பாமரனுக்கு நாகரீக வாழ்க்கை நிம்மதி தருமா? அலசுகிற கதையோட்டத்தில், ரிலீஸுக்கு ரெடியாய் ‘முன்னா.’

0
36

சாட்டையடித்து, கழைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்கையை அனுபவிக்க ஆசை. அதிஷ்டவசமாக அவன் எதிர்பார்த்தது நடந்துவிட, அந்த வாழ்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா என்பதே முன்னா படத்தின் கதையோட்டம்!

தெருக்கோடி வாழ்க்கையில் கிடைக்கிற பணமே போதும் என்று மனசு சொல்லும். அதே மனசு நாகரீக வாழ்கையில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் பத்தாது என்றுதான் சொல்லும், ஆனால் நிம்மதியும் இருக்காது என்ற கருத்தை மையமாக வைத்து திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கியுள்ளார் சங்கை குமரேசன்.

நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து,ராஜாமணி, சண்முகம்,வெங்கட்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நல்ல கருத்துள்ள படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு அளிப்பார்கள் அதே போல் இந்த முன்னா படமும் மக்களின் ஆதரவோடு வெற்றிபெறும் என்கிறார் இயக்குனர் சங்கை குமரேசன். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமுமுத்துச்செல்வன் தயாரித்துள்ள இப்படத்திற்கு பாடல்களுக்கான இசையினை D.A.வசந்த்தும், பின்னணி இசையினை சுனில் லாசரும் அமைத்துள்ளனர்.

ஒளிப்பதிவினை ரவியும், நடனத்தை கென்னடி மாஸ்டரும், எடிட்டிங்கை பத்மராஜும் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here