இன்றைய காலகட்டத்தில் யாரையாவது கிண்டலடிக்க வேண்டுமா? உடனே மீம்ஸ்ரெடிபண்ணுவோம் என்று கிளம்புகிறது ஒரு கூட்டம்!

மீம்ஸ் என்பதை கிண்டலுக்கும் நக்கலுக்குமான விஷயமாக பார்க்க வேண்டாம். அது மிகவும் அருமையான வளர்ச்சி, அதனை நம் சமுதாயம் மேலும் அழகுற பயன்படுத்திக்கொண்டால் நமது ஒற்றுமை மேம்படும்’’ என படு வித்தியாசமான கருத்து ஒன்றை முன்வைக்கிறார் இசையமைப்பாளர் குரு கல்யாண்!

இவர் சமீபத்தில் ‘மீம்ஸ் சாங்ஸ்’ என்ற பாடலை வெளியிட்டு கவனம் ஈர்த்துவருகிறார்.

அதென்ன மீம்ஸ் சாங்?

குருகல்யாணிடம் கேட்டோம்…

’’வெவ்வேறு காலகட்டங்களில் இசை கலைஞர்களின் பங்களிப்பு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாது, சமூக எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடாகவும் இருந்து வருகிறது. திரைப்படங்களை தாண்டி, நான் சென்ற ஒரு வருட காலமாக இறையருளால் தனிப்பாடல்களையும் இசையமைத்து வெளியிட்டு வருகிறேன்.

இந்த ஆண்டு நான் வெளியிட்ட “மனிதா மனிதா எழுந்து வா” மற்றும் “ஜீரோ தாண்டா ஹீரோ” ஆகிய தனிப்பாடல்கள் இணையதளத்தில் வெகுவாக வரவேற்கப்பட்டது. அவ்வழியில் “மீம்ஸ் சாங்” என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளேன்’’ என்றவர்,

“மீம்ஸ்” தனிமனிதர் மற்றும் இந்த தலைமுறை மீதும் மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது, வெகு விரைவாகவும் சென்றடைகிறது. இது ஒரு மாடர்ன் மிமிக்ரி என்றே எண்ணுகிறேன். ஐ.டி மீம்ஸ், பி.பி.ஓ மீம்ஸ், கணவன் & மனைவி மீம்ஸ், என்று இதில் பல வகையான மீம்ஸ்கள் பயன்பாட்டில் இருப்பதை கண்டு வியப்படைந்தேன். ஜாதி மதங்களை தாண்டி இது அனைவரையும் சென்றடைந்து மகிழ்ச்சியடைய வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது.

போலியான மீம்ஸ் செய்திகள் வந்தால் அதனையும் மீம்ஸ்-ஆக எழுதி அதையும் ட்ரெண்ட் செய்துவிடுகிறார்கள். மீம்ஸ் மிகவும் அருமையான வளர்ச்சி, அதனை நம் சமுதாயம் மேலும் அழகுற பயன்படுத்திக்கொண்டால் நமது ஒற்றுமை மேம்படும், தமிழர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கருதி, எனது இந்த மீம்ஸ் பாடலை நான் எழுதி, இசையமைத்து, பாடி வெளியிட்டுள்ளேன்.

தொடர்ந்து எனது சிறிய முயற்சிகளுக்கு ஆதரவளித்து வரும் தன்னலம் கருதாத ஊடக நண்பர்கள், பெரியோர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த பாடலுக்கும் தங்கள் ஆதரவை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று முடித்தார்.

பாடலைக் கேட்பதற்கான லிங்க்ஸ் இதோ:-

Youtube Link:
Facebook Link:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here