பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு – லஷ்மிமேனன் இருவரும் அறிமுகமான ’கும்கி’ படம் 2012-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கும்கி 2’ என்ற பெயரில் தயாராகிறது.

பிரபு சாலமன்

இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். ஆர்.ஜே.பாலாஜி, சூசன், ‘கோலங்கள்’ திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ,வில்லனாக ஹரிஷ் பெராடிஆகியோர் நடிக்கிறார்கள். நாயகி இன்னும் முடிவாக வில்லையாம். படத்தில் நடிக்கும் யானையின் பெயர் உன்னிகிருஷ்ணன்!

படம் பற்றி இயக்குநர் பிரபுசாலமனிடம் கேட்டால், தமிழ் சினிமா பொறுத்தவரை பெரும்பாலும் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப் படும். ஆனால் கும்கி படத்திற்கும், கும்கி 2’ படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப் பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது.

ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் கும்கி 2.

குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கல, பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்க வில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக இந்த கும்கி 2 இருக்கும்.

வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் K. பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும்’’ என்றார்

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபுசாலமன்
ஒளிப்பதிவு – சுகுமார்
இசை – நிவாஸ் K.பிரசன்னா
எடிட்டிங் – புவன்
கலை – தென்னரசு
ஸ்டன்ட் – ஸ்டன் சிவா
தயாரிப்பு மேற்பார்வை – பிரபாகரன்
தயாரிப்பு – பென் இந்தியா லிமிடெட் திரு ஜெயந்திலால் காடா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here