தன்னம்பிக்கைக்கு உதாரணம்! வலிகளைத் தாங்கி வழியைக் கண்டறிந்து முன்னேறிய, கோவை ‘கண்ணன் அசோசியேட்ஸ்’ நிறுவனர் மா. முருகன்!

0
159
கோவையில் ஒன்பது வருடங்களை கடந்து, கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு தனது சிறந்த சேவையை திறம்பட செய்து, கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது ‘கண்ணன் அசோசியேட்ஸ்!
கடுமையான வலிகளைச் சுமந்து, தன்னம்பிக்கையுடன் உழைப்பை விதைத்து மேற்குறிப்பிட்ட வெற்றியை அறுவடை செய்திருக்கிறார் ‘கண்ணன் அசோசியேட்ஸ்’ நிறுவனர் மா. முருகன். தொடர்புஎண்: 8428147575
அந்த வலிகள் என்னென்ன? அதிலிருந்து தன்னுடைய வெற்றிக்கான வழியைக் கண்டறிந்து முன்னேறியது எப்படி? அவரே சொல்கிறார்…
கல்லூரி முடித்த காலகட்டத்தில் தொழில் செய்தால் தான் நினைத்த வாழ்க்கையை வாழ முடியும் என்ற எண்ணத்தில் வீடு வீடாக சென்று பான் கார்டு பாஸ்போர்ட் போன்ற அப்ளிகேஷனை பெற்றுக்கொண்டு பிரவுசிங் சென்டரில் வைத்து அப்ளை செய்து மீண்டும் அவர்கள் வீட்டிற்கே சென்று ரசீதுகளை கொடுத்து சேவை செய்து எனது பணியை ஆரம்பித்தேன்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு மருதமலை முருகன் அருளால் கோவை காந்திபுரம் ஏழாவது வீதியில் பார்ட்னர் ஒருவருடன் இணைந்து கண்ணன் அசோசியேட்ஸ் என்ற பெயரில் தொடங்கினேன்!
அடுத்த சில வருடங்களுக்குப் பிறகு கவுண்டம்பாளையத்தில் கண்ணன் அசோசியேட்ஸின் கிளையை மிகப்பெரிய அளவில் என் கனவுகள் கலந்து தொடங்கினேன்.
அடுத்து ஒண்டிப்புதூரில் ஒரு கிளை என இந்த 10 ஆண்டுகளில் மூன்று சொந்த கிளைகளுடன் நான்கு பணிப் பெண்களுடன் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறேன்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒரு பான் கார்டு கிடைத்தால் 100 ரூபாய் லாபம் கிடைக்கும் அதற்கு கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்தில் பயணிக்க வேண்டியிருக்கும் போய் வரும் செலவு சாப்பாட்டு செலவு என 60 ரூபாய்க்கு மேல் செலவாகிவிடும் ஒரு சில நாட்களில் 100 ரூ கூட செலவாகிவிடும். இன்னும் சில நாட்களில் விண்ணப்பங்கள் ஏதும் கிடைக்காவிட்டால் சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருக்கும் ஊருக்கு போன் பண்ணி ஏதாவது கொஞ்சம் பணம் போட்டு விடுங்க என்று கேட்க நினைக்கும் மனம் ஆனால் இரவு பகல் என பீடி சுற்றி வாரம் 300 ரூபாய் சம்பாதித்து 200 ரூபாய்க்கு மேல் வட்டி கட்டும் தாயிடம் எப்படி கேட்பது என சாப்பாடு இல்லாமல் வெறும் தண்ணீர் குடித்து கொண்டு கூட பல நாட்களை நகர்த்தி இருக்கிறேன்.
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எட்டாம் நம்பர் மார்க்கெட் அருகில் தள்ளுவண்டியில் தக்காளி சாதம் தயிர் சாதம் என பல சாத வகைகளை விற்பனை செய்யும் மல்லிகா அக்கா பல முறை காசு வாங்காமல் சாப்பாடு தந்திருக்கிறார். பல நாட்கள் அவர்களிடம் என் சொந்த ஊர் சோகக் கதைகளை எல்லாம் புலம்பித் தீர்த்து இருக்கிறேன். சிரித்துக்கொண்டே கேட்பார். திருப்பி அவர் கதையை சொல்வார். அதற்கு நான் எவ்வளவோ பரவாயில்லை. பணம் இல்லையென்றாலும் நல்ல தாய் தகப்பன் என நல்ல குடும்பத்தோடு இருக்கிறேன் என்று சந்தோஷம் இருக்கும்.
என் கஷ்டத்தை இரண்டாவதாக புரிந்து கொண்டவர் ஜிபி சிக்னல் அருகிலுள்ள கேவிபீ ஏடிஎம் ஒட்டிய மெஸ் கடைக்காரர். இன்றுவரை அந்த அண்ணாவின் பெயர் கூட கேட்டதில்லை. ஆனால் நான் அவர்களை முன்னால் வந்து நின்றாலே ஏதோ ஒரு சாப்பாட்டை எடுத்து தட்டில் நீட்டுவார் காசிருக்கும் போது சிரித்துக்கொண்டே தட்டை வாங்கும் என் மனது, காசு இல்லாதபோது கொஞ்சம் தயக்கத்தோடு அதை பெற்றுக் கொள்வேன். என் தயக்கத்தை வைத்தே என்னிடம் பணம் இல்லை என்பதை அவர் தெரிந்து கொள்வார். சிரித்துக் கொண்டே, ‘பழைய கடன் உடன் இதையும் கடனாக சேர்த்துக் கொள்கிறேன் திருப்தியாக சாப்பிடு’ என்பார். அவர்களையெல்லாம் இன்றும் என்றும் மறந்ததில்லை. அவர்கள் கடைகளை கடக்கும் போதெல்லாம் காரை நிறுத்திவிட்டு அவர் கடையில் சாப்பிட்டு விட்டு ஐம்பது ரூபாயாவது சேர்த்து கொடுக்காமல் போக மனம் வராது. இந்த இரண்டு நபர்கள் என்னிடம் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் என் ஆரம்ப காலகட்டத்தில் துணைநின்றவர்கள்!
சில தருணங்களில் பேருந்துக்கு காசு இல்லை என்றால் ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று இருக்கிறேன். அதில் ஒரு விஷயம் நன்றாக நினைவிருக்கிறது… கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சேரன்மாநகர் வகையில் நடந்தே சென்று ஒரு விண்ணப்பம் பெற்று வந்தேன். அந்த வீட்டில் இருந்த சுமார் 60 வயது மிக்க பெரியவர் எப்படிப்பா வந்த என்று கேட்டார் நடந்து தான் அப்பா வந்தேன் என்று சொன்னேன். மனசு கேட்காமல் 200 ரூபாய் தரவேண்டிய பான்கார்டு விண்ணப்பத்திற்கு 500 ரூபாயாக கொடுத்தார். எப்படிப்பட்ட வலியான தருணங்களும் இப்படிப்பட்ட நபர்களை பார்க்கையில் இவர்களுக்கு செய்யும் சேவையில் சில சந்தோஷங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
திரும்பி வரும்போது கையில் பணம் இருந்த போதும் ஆறு ரூபாய் மிச்சப்படுத்தலாம் என்று எப்படி நடந்து வந்தமோ அதேபோல் திரும்பி நடந்து போவதில் என்ன பிரச்சனை என்று நடந்தே திரும்பினேன்!
ஏற்கனவே பணம் சம்பாதிப்பதில் இருக்கும் கஷ்டத்தையும் பணத்தின் அருமையும் நன்றாக தெரிந்தது. சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினேன். ஆடம்பரச் செலவுகளை துளி கூட நினைத்துப் பார்த்ததில்லை. அத்தியாவசிய செலவிற்கு எப்போதும் கணக்கு பார்த்ததில்லை!
இடையிடையே சில மார்க்கெட்டின் நிறுவனங்களில் பகுதிநேர பணியையும் சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் ஏஜென்ட் பணியையும் செய்துகொண்டு ஒரே நேரத்தில் பல தொழிலில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் வெற்றியின் தூரம் அருகில் வரும் என கிடைத்த தொழில் எல்லாம் என்னாலான உழைப்பை போட்டு ஓடத் தொடங்கினேன்!
இந்தப் பத்து வருட கால ஓட்டத்தை இன்றுவரை நிறுத்தவில்லை. பலருடைய முகப்புத்தக பதிவு பார்க்கிறேன், பணம் பணம் என்று ஒடுகிறவர்கள் பணத்தாசை பிடித்தவர்கள் என்று நிச்சயம் அவர்களுக்கு பணம் இல்லாததால் ஏற்படும் அவமானங்களையும் பசி பட்டினி என்று வெயிலில் அலைந்து திரிந்த மயக்கமாகி கீழே விழுந்து இருக்க நிச்சயம் வாய்ப்பு இல்லை. அந்த நிலைக்கு ஒரு தருணம் அது தள்ளப்பட்டு இருந்தால் நிச்சயம் அவர்கள் அந்த மாதிரி பதிவிட்டு இருக்க மாட்டார்கள்.
நானும் ஒப்புக்கொள்கிறேன் வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று ஆனால் நான் சம்பாதிக்கும் பணம் எனக்கானது மட்டுமல்ல என்னை நம்பி என்னுடன் பயணிக்கும் பல குடும்பங்களுக்கானது.
பல அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதோ ஒருவகையில் உதவுகின்ற ஒரு நிகழ்விற்கு அந்த பணம் காரணமாய் இருக்கும்.
பசியால் பட்டினியால் வாடிய என்போன்ற குடும்பங்கள் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் இந்த ஓட்டங்கள் நிற்க!
இத்தனை கால ஓட்டத்தில் நிச்சயம் ஒன்றை மட்டும் ஒப்புக் கொள்கிறேன் வெறும் தனிப்பட்ட மனிதனின் உழைப்பு மட்டும் நிச்சயம் இத்தகைய பெரிய வெற்றியை தரவில்லை என்னுடைய காலகட்டம் சூழ்நிலை சந்தர்ப்பம் சேர்ந்த நண்பர்கள் கிடைத்த எதிரிகள் என ஒவ்வொருவரும் இந்த வளர்ச்சிக்கு ஏதோ ஒரு தருணத்தில் காரணமாக இருந்திருக்கிறார்கள்!
கடந்த ஆடி 18 இந்த தொழிலை மையப்படுத்தி சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கும் ஆண் பெண் என இருபாலரும் தங்கள் பகுதியை தொழில் தொடங்குவதற்கும் தொழிலை திறம்பட செய்வதற்கும் தேவையான பயிற்சி மற்றும் தனி வலைதளம் போன்றவற்றை வழங்கி வாழ்வில் பொருளாதார வளர்ச்சி காணத் தேவையானவழிவகை செய்யும் தொழில் வாய்ப்பு தான் டிஎஸ்சி.
இந்த தொழில் வாய்ப்பு மூலம் கடந்த 60 நாட்களில் 65 ப்ராஞ்சசிகள் இதுவரை பதிவு செய்யப்பட்டு 20க்கும் மேற்பட்ட கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்தகைய மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்த தாய் தந்தை சொந்த பந்தங்களுக்கும்
உறுதுணையான நல்ல உள்ளங்களுக்கும்
இன்றும் புதிய நபர்களை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கும்
எங்கே தடுக்கி விழுவோம் என்று எதிர்பார்த்த எதிரிகளுக்கும் கூடவே இருந்து வஞ்சனை செய்த துரோகிகளுக்கும் எல்லா சூழ்நிலையிலும் உடனே இருந்து என்னைத் தாங்கிப் பிடித்த
மருதமலை முருகனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, வாழ்க்கையில் நாம்
இன்று எவ்வளவு கஷ்டப்படுகிறோமோ எவ்வளவு அவமானப் படுகிறோமோ அனைத்திற்கும் சேர்த்து மிகப் பெரிய வெற்றி காத்திருக்கிறது, நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் கைவிடாதீர்கள். தொடர்ந்து ஏதேனும் உங்களுக்குப் பிடித்த துறையில் உழைத்துக் கொண்டே இருங்கள், அது சொந்தத் தொழிலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் விருட்சமாகும்.
நம்பிக்கையோடு நடை போடுங்கள்!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here