சாவுக்கு ஆடுபவர்கள் திறமையாலும் தன்னம்பிக்கையாலும் சர்வதேச டான்ஸர்களாக தகுதி உயரும் கதை.koothan movie stills kira narayanan க்கான பட முடிவு

சினிமாவுக்காக போடப்பட்ட செட்டுகளையே ‘பிலிம் நகர்’ என்ற பெயரில் தாங்கள் வசிப்பதற்கான குடியிருப்புகளாகிக் கொண்ட துணை நடிகர் நடிகைகள்… ஒரு கட்டத்தில் அங்கு வசிப்பவர்கள் அந்த குடியிருப்பைக் காலி செய்ய வேண்டும் அல்லது அந்த குடியிருப்பை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். சின்னச் சின்ன நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி 1000 – 2000 என வருமானம் பார்த்து அதில் பிழைப்பு நடத்தி வருகிற  பேட்டரி பாய்ஸ் நடனக்குழுவின் தலைவன் ராஜ்குமார் அந்த குடியிருப்பை விலைக்கு வாங்கிக் கொள்வதாக உறுதியளிக்கிறான்.

அது எப்படி சாத்தியம்? ராஜ்குமாருக்கும் அவரது நண்பர்களுக்கும் மூச்சு, பேச்சு எல்லாமே டான்ஸ் டான்ஸ் டான்ஸ்! ஆகவே, நடனப் போட்டிகளின் மூலமே பணம் புரட்ட எண்ணி சர்வதேச டான்ஸ் போட்டியில் பங்கேற்பதற்குத் தயாராகிறார்கள்.

திறமையாளர்கள் எதைச் செய்தாலும் அதற்கு எதிராக போட்டி, பொறாமையெல்லாம் தலைதூக்கத்தானே செய்யும்? அந்த போட்டி, பொறாமைகள் பேட்டரி பாய்ஸின் சார்ஜை இறக்கப் பார்க்கிறது. அப்புறமென்ன போட்டி பொறாமை ஜெயித்ததா? திறமை வென்றதா? என்பதே கூத்தனின் மிச்சக் கதை!

புதுமுக ஹீரோ ராஜ்குமார் சாவுக்குத்து,வெஸ்டர்ன்,பரதம் என வெரைட்டியான டான்ஸ் கொடுத்து நடித்திருக்கிறார். இவரின் நடனத் திறமை பாராட்டுக்குரியது தான் என்றாலும் இரண்டு மணிநேரம் ஆடியன்ஸை கட்டிப்போடும் ஹீரோவாக நம் மனதில் பதிய தவறுகிறார்.தொடர்புடைய படம்

மாடர்ன் உடைகளில் படம் முழுக்க கவர்ச்சியாகவே வருகிறார் ஸ்ரீஜிதாகோஷ். நடனத்திலும், நடிப்பிலும் நம்மை முகம் சுழிக்காத வண்ணம் பார்த்து கொள்கிறார்.

தொடர்புடைய படம்

இவரின் அக்காவாக கிரா நாராயணன் அழகு, நளினம், நடிப்பு அத்தனையிலும் ஸ்கோர் செய்கிறார். பரதம் டான்ஸரான இவர் தடாலடியாக கிளைமேக்ஸில் வெஸ்டர்ன் டான்ஸ் ஆடுவதெல்லாம் பக்கா சினிமாத்தனம்.

சோனால் சிங் பேட்டரி பாய்ஸ் குழுவில்  ஒரே பெண் அழகியாக வருகிறார். à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம்வில்லனாக பிரபு தேவாவின் சொந்த தம்பி நாகேந்திர பிரசாத். நடனத்தில் அசத்துகிறவர் வில்லத்தனத்தில் நாம் பார்த்து பழகிய வில்லன்களை ஜெராக்ஸ் பண்ணிருப்பதோடு சரி.koothan bhagyaraj க்கான பட முடிவுபாக்யராஜ், மனோபாலா, ரேணுகா உள்ளிட்டோர் கெஸ்ட் ரோல் பண்ணிருக்காங்க. ஹீரோவின் வளர்ப்புத் தாயாக ஊர்வசி படம் முழுக்க வந்தாலும் நடிப்பில் சொல்லிகொள்ள ஏதுமில்லை.

சன் டிவி ஆடம், விஜய் டிவி சரத், முல்லை & கோதண்டம் படத்திலும் ஸ்டாண்ட் அப் காமெடிதான் பண்ணிருக்காங்க. கலா மாஸ்டர், ராம்கி, சஞ்சய் டான்ஸ்க்கு மார்க் போடும் நீதிபதிகளா வர்றாங்க.

koothan movie stills க்கான பட முடிவு

பால்ஸ்.ஜி.இசையில் டி.ஆர் பாடிய மங்கிஸ்தா டைம் மிஷினில் தவறி கடந்த காலத்தில் இருந்து இந்த காலக்கட்டத்தில் நுழைந்திருக்கு போலும். இருந்தாலும் பாடல்கள் கேட்க கூடிய ரகம்.

மாடசாமி எனும் மாட்ஸ் ஒளிப்பதிவில் படத்தை அவ்ரேஜ் ஸ்கோருக்கு கொண்டு சென்றுள்ளார்.நடனத்தை மையப்படுத்திய படத்தை கடமைக்கு எடுக்காமல் அதன் வீரியம் உணர்ந்து எடுத்துள்ளார் டைரக்டர் வெங்கி ஏ.எல். படத்தில் டைரக்டர், ஆர்டிஸ்ட் அனைவரும் நடனத்துக்காக மட்டுமே உழைத்திருக்கின்றனர். இந்த உழைப்பை நடிகர்கள் நடிப்பிலும், டைரக்டர் திரைக்கதையிலும் கொட்டியிருந்தால் ‘கூத்தன் தியேட்டரில் கூட்டம் சேர்த்தான்’ என்ற பெருமையைச் சம்பாதித்திருப்பான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here