பிராமணர், முஸ்லீம், கிறிஸ்தவர் மத்தியில் அன்றாடத் தேவைக்கே மன்றாடிக் கிடந்த, கிட்டத்தட்ட அடிமையாய்க் கிடந்த எளிய மக்களின் விடுதலைக்காக போராடிய போராளி காயம்குளம் கொச்சுன்னியின் கதை.தொடர்புடைய படம்தண்ணீருக்கு மட்டுமல்லாமல் கேரளாவில் ஜாதிக்கும் தட்டுப்பாடு இல்லாத ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் அது.

காயம்குளம் என்ற தனது சொந்த ஊர்ப் பெயரை மறைத்து ஒரு கிராமத்தில் வாழ்கிறார் நிவின் பாலி. அந்த கிராமத்தில் தெருவுக்கு ஒரு ஜாதி, ஜாதிக்கு ஒரு  நீதி என்று மக்கள் வாழ்கின்றனர்.தொடர்புடைய படம்இந்த ஜாதிமான்கள் கூட்டத்தில் வெள்ளைமயிலாக வலம் வரும் பிரியா ஆனந்த், நிவின் பாலியின் கண்ணில் பட இருவருக்கும் காதல் படபடக்கிறது.

ஜாதிப்பிரியர்கள் இந்த இளம் ஜோடிகள் மீது மாறுபட்ட தாக்குதலை வெவ்வேறு விதமாக நடத்துகின்றனர்.kayamkulam kochunni க்கான பட முடிவுஇந்த தாக்குதலில் இருந்து மீண்டும் எழும்  நிவின்பாலி, அடித்தட்டு மக்களை வேறுன்றி  அரித்தெடுக்கும் ஜாதிப் பல்லைப் பிடுங்கி எறிய முயல்கிறான்.

இந்த சீரிய முயற்சிக்கு எதிராக ஆங்கிலேயர்கள், பிராமணர்கள் என அனைவரும் ஒன்று திரள்கின்றனர். இவர்களுக்குள் நடக்கும் போராட்டமும்,போர்க்களமும் தான் படத்தின் மீதிக்கதை.

உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால்  யதார்த்தத்தை கவனித்து நடிக்க வேண்டிய கட்டாயம் நிவின் பாலிக்கு. ஹீரோயிஸம், மேனரிசம் என்பது எல்லாம் இங்கே கிடையாது.

காயம்குளம் கொச்சுன்னி கேரக்டருக்குள்ளேயே அத்துனை ஹீரோயிஸமும் அடங்கியிருக்கிறது. அதனை உள்வாங்கி நடித்துள்ளார் நிவின் பாலி.kayamkulam kochunni க்கான பட முடிவுகொச்சுன்னியின் உள்ளே புதைந்து கிடக்கும் ஹீரோயிஸத்தை வெளிக்கொண்டு வரும் இதிக்கார பக்கி கேரக்டரில் மோகன்லால் கெஸ்ட் ரோலாகா இருந்தாலும் பெஸ்ட் ரோல் பண்ணிருக்கிறார்.

சண்டை பயிற்சியில் களரியுடன் நிவின் பாலிக்கு ஷாவ்லின் குங்க் ஃபூ பயிற்சியெல்லாம் கொடுக்கிறார். அதுவும் மோகன்லால் நடிப்பில் பார்க்க நேர்த்தியாகவே இருக்கிறது.

பளிச்சிடும் மேனியில் கேரளத்து ஆடை அணிந்து அழகு தேவதையாய் வருகிறார் பிரியா ஆனந்த். கிளைமேக்சில் ஆங்கிலேயர்களிடம் நிவின் பாலி சிக்கும் காட்சிகளில் பிரியா ஆனந்த் பேசும் வசனங்கள் எதிர்பாராத திருப்புமுனை .kayamkulam kochunni priya anand க்கான பட முடிவுஆங்கிலேயர்கள், பிராமணர்கள் என ஆர்டிஸ்ட்களை வகைப் பிரித்து நடிக்கவைத்துள்ளனர். குறிப்பாக எம்.எஸ் பாஸ்கர் பிராமணராக கதாபாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்தியுள்ளார். அவரை இன்னும் உபயோகித்திருக்கலாம்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வு சாயலில் கிளைமேக்ஸ் சீகுவென்ஸை மாறுபட்ட கோணத்தில் படம்பிடித்துள்ளனர்.பாபு ஆண்டனியின் சண்டைக் காட்சியும், நிவின் பாலியின் ஸ்டண்ட் சீன்களும் இந்த சீகுவென்ஸை தூக்கி நிறுத்துகிறது.kayamkulam kochunni க்கான பட முடிவு

காடுகளையும், மலைகளையும் காட்சிகளாக ஆக்கியதுடன் சண்டைக்காட்சிகளில் ஆர்டிஸ்ட்களின் உழைப்பை மிச்சம் மீதி வைக்காமல் ஒளிப்பதிவு செய்துள்ளனர் . ஒளிப்பதிவு:பினோத் பிரதன், நீரவ் ஷா, சுதிர் பால்சனி.

இந்த மிச்சம் வைக்காத எண்ணம் எடிட்டர் மனதில் குடிகொள்ளாவிட்டால் நீளமான படத்தை அளவான படமாக தந்தருளியிருப்பார் போலும், படத்தின் நீளத்தை அப்படி வளர்த்துள்ளனர்.

10-ம் நூற்றாண்டில் நிலவிய உள்நாட்டு சாதிக்கொடுமையையும், வெளிநாட்டவர்களின் ஆக்கிரமிப்புகளையும் நேருக்கு நேர் சந்தித்து போரிட்ட வரலாற்று வீரனின் கதையை எடுக்கிறோம் என்ற பயபக்தியுடன் படத்தை இயக்கியிருக்கிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.kayamkulam kochunni க்கான பட முடிவுவரலாற்றினை வாசம் பிடிக்கும் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் தியேட்டர் படியேற்றி திருப்தி தரும் படம் ‘காயம்குளம் கொச்சுன்னி.’

-ஜெ.ஜெகதீஸ் (jagadishmedia@gmail.com)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here