ரசிகர்களை தியேட்டருக்கு வரவைப்பதற்காக இயக்குநர்கள் எத்தனையோ வித்தியாசமான முயற்சிகளை எடுக்கிறார்கள். அப்படியொரு முயற்சியின் பலனாக சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கார்கில்’.

ஜிஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவரைத் தவிர வேறு கேரக்டர்களே கிடையாது. ஆம் ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம் இது!

”கார்கில் என்றதுமே இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் தான் மக்களுக்கு ஞாபகத்தில் வரும். ஆம் இதுவும் ஒரு போர் தான்.சென்னையிலிருந்து காரில் பெங்களுர் செல்லும் நாயகனுக்கும் அவன் காதலிக்கும் ஏற்படும் மன போராட்டமே இந்தப்படம். ஒரே ஒருத்தர்தான் நடித்துள்ளார், அப்படியானால் காதலி யார் என கேட்கிறீர்களா..? அதுதான் படத்தின் டிவிஸ்ட்டே!

காதலில் நம்பிக்கை மிக அவசியம், அந்த நம்பிக்கை காதலை சேர்த்து வைக்கும் என்கின்ற நல்ல கருத்துடன், புது முயற்சி என்பதற்காக போராடிக்காமல், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இது உருவாகியுள்ள இந்த படத்துக்கு சென்ஸார் ‘U’சான்றிதழ் அளித்து பாரட்டியுள்ளனர்.

ஜூன்-22ல் திரைக்கு வர தயாராக இருக்கும் இந்த புதிய முயற்சி மக்களின் ஆதரவை நிச்சயம் பெறும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்’’ என்கிறார் இயக்குனர் சிவானி செந்தில்.

சுபா செந்தில் தயாரித்துள்ள இந்தப்படத்தின் பாடல்களை பாரி இளவழகன் மற்றும் தர்மா எழுத விக்னேஷ் பாய் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கணேஷ் பரமஹம்ஸாவும் படத்தொகுப்பை அபிநாத்தும் மேற்கொண்டுள்ளனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here