‘கலைமாமணி’ வேல் முருகன் குரலில் பாரம்பரியப் பழமை மாறாத கந்த சஷ்டி கவசம்!

0
167

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட தமிழர்களின் ரத்தத்தோடு ரத்தமாக கலந்துவிட்ட ஆன்மிகப் பாடல்களில் ஒன்று கந்த சஷ்டி கவசம்!

கிராமியப் பாடல்களையும், மண்மணம் மாறாத திரைப் பாடல்களையும் உற்சாகம் தெறிக்கும் குரலில் பாடுவதன் மூலம் தனக்கென தனி அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் ‘கலைமாமணி’ வேல் முருகன்.

அந்த வேல்முருகன் குரலில் கந்த சஷ்டி கவசத்தைக் கேட்டு இன்புறும் வாய்ப்பை ஆன்மிக உலகிற்கு காலம் இப்போது வழங்கியிருக்கிறது.

ஆம், தன் பெயரிலேயே முருகனின் பெயரையும் முருகனின் ஆயுதமான வேலையும் தாங்கியிருக்கிற வேல்முருகன் கந்த சஷ்டி கவசத்தைப் பாடியிருக்கிறார். அது இப்போது யூ டியூபில் ரிலீஸாகி பரபரப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது.

பாடலின் பாரம்பரியப் பழமை மாறாமல் அதே நேரம் கம்பீரத்துடனும் தனக்கேயுரிய உற்சாகத்துடனும் பாடியிருப்பது சிறப்பு. ஆழ்ந்து அனுபவித்துக் கேட்டால் சிலிர்ப்பு ஏற்படுவது உறுதி!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here