சிரிப்புக்கு கேரண்டி! கலைஞர் தொலைக்காட்சியின் ‘தில்லு முல்லு.’

0
191

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புத்தம் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி தில்லு முல்லு.

கோபம், வெறுப்பு, ஆசை, துக்கம், ஆத்திரம், இயலாமை, சோம்பேறித் தனம் என பல குணநலன்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மை சூழ்ந்து கொள்ளும். இவை அத்தனையையும் மறக்க குறுநகை ஒன்றே போதும்.

 ஒருவரை கோபப்படுத்த சில நிமிடங்கள் போதும். ஆனால், ஒருவரை சிரிக்க வைப்பதென்பது எளிதான காரியம் அல்ல. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது சான்றோர் மொழி. அந்த வகையில், எந்திர வாழ்க்கையில் உலாவும் ஒவ்வொருவரையும் சிரிக்க வைக்க புத்தம் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று கலைஞர் தொலைக்காட்சியில் உதயமாகி இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நட்சத்திரங்களான சிங்கப்பூர் தீபன், , முல்லை, கோதண்டம், கூல் சுரேஷ், அன்னலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.சிரிக்காத நாட்கள் வீணடிக்கப்பட்ட நாட்கள். உன் சிரிப்பின் நீளமே உன் வாழ்நாளின் நீளம். சிரியுங்கள். வாழ்க்கையை வளமானதாக மாற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here