லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் அதிரடி ரீ என்ட்ரீ! கலைஞர் தொலைக்காட்சியின் ‘நேர் கொண்ட பார்வை.’

0
138

சினிமாவில் தனது நடிப்பாலும், சின்னத்திரையில் தனது பேச்சாலும் மக்கள் மனதில் பதிந்தவர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்.

சின்னத்திரையின் மூலம் தமிழ் குடும்பங்களில் ஒருவராகவே மாறிப்போன அவர் சிறிதுகாலம் சின்னத்திரையில் இருந்து சற்றே விலகி இருந்தார்.

இப்போது ரீ என்ட்ரீயாக கலைஞர் தொலைக்காட்சியில் தனது புதிய பயணத்தை துவங்கவிருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த அதிரடி அறிவிப்பாக நேர்கொண்ட பார்வை என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

தவறுகள் தான் குற்றங்களுக்கு காரணம். நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட பின்னாளில் நமது வாழ்க்கையையே புரட்டி போடலாம். குற்றம் செய்யும் யாரும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதில்லை. தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே முயல்கின்றனர். இதை முன்மாதிரியாக வைத்தே, சமுதாயத்தில் குற்றங்கள் பெருகி வருகின்றன.

இவ்வாறான சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்ற பல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வர உருவாக்கப்பட்டுள்ள ஒரு மேடை தான் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 17-ந் தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை  இரவு 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here