கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ‘காலை கதிரவன்.’ உடல் நலம், உணவு பழக்கம், திருக்குறள், வைரல் வீடியோக்கள் எல்லாமும் உண்டு!

0
232

காலைப் பொழுதில் புதிய தகவல்களை பார்வையாளர்கள் விரும்பும் வகையில் தொகுத்து வழங்குகிறது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் காலை கதிரவன் என்ற நிகழ்ச்சி.

 

 

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு பகுதிகள் இடம்பெறுகின்றன.

உடல் நலம் மற்றும் உணவு பழக்கத்தை அக்கறையுடன் சொல்கிறது ‘நலம் நலம் அறிக’ பகுதி. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில், மக்களுக்கு விருப்பமான சுவைகளில் விருந்தளிக்கும் உணவகங்களை அறிமுகப்படுத்தும் பகுதி,  #133 தலைமுறைகள் தாண்டியும் தலை நிமிர்ந்து நிற்கும் நூலான திருக்குறளை,இளம் தலைமுறையினரிடத்தில் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் தினமும் ஒரு திருக்குறளும் அதற்கான எளிய தெளிவுரையும், மற்றும் சமூக வலைதளங்கள் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் இயங்குவது கடினம். அப்படிப்பட்ட சமுக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை தொகுத்து வழங்குகிறது ‘வைரல் தளம்’ பகுதி போன்றவை இடம்பெறுகிறது .

சுமையா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here