‘காதல் மட்டும் வேணா’ சினிமா விமர்சனம்

0
226

ஹீரோவுக்கு படம் இயக்கி அடுத்த ஷங்கர் ஆகவேண்டும் என்று ஆசை. படம் இயக்கவும் செய்கிறார்.

அவருக்கு ஒரு கேர்ள் ஃபிரென்ட். அவளுடன் காரில் பயணம், உதட்டில் முத்தம் என ஜாலியாகத் திரிகிறார். திடீரென அந்த கேர்ள் ஃபிரென்ட் மர்மமான முறையில் காணாது போகிறாள். போலீஸில் புகார் கொடுத்தால் ஆறு மாதங்கள் முன்பே அந்த பெண்ணை சில காமவெறியர்கள் சூறையாடி கொன்றுவிட்ட தகவல் கிடைக்கிறது. -இது கதையின் ஒரு பாதி.

ஹீரோவுக்கு ஏதேனும் ஒரு பெண்ணுடன் அந்த இரவை மஜாவாக கழிக்கவேண்டும் என்று ஆசை. புரோக்கர் மூலம் முயற்சி செய்தால் சொதப்புகிறது. போலீஸில் சிக்குகிறார். கைவசமிருக்கும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு போலீஸ் துரத்திவிடுகிறது.

இப்போது,  சாம்கானுடன் நெருங்கிப் பழகிய பெண் யார்? அந்த பெண் இறந்துவிட்டதாக சொல்லப்படுவது உண்மைதானா? உண்மையெனில் அந்த பெண் எப்படி சாம்கானுடன் பழகியிருக்க முடியும்? சாம்கானும் இறந்து போனவன் என்றால் அவனுக்கு என்ன நடந்தது? என்றெல்லாம் கேள்விகள் எழும்.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல இரண்டாம் பாகம் வருகிறது என்ற அறிவிப்போடு முடிகிறது. படத்தின் நீளம் 94 நிமிடங்கள் மட்டுமே!

முதல் பாதி திரைக்கதை ஏனோதானோவென்று கடந்தாலும் இடைவேளைக்குப் பிறகு கதையில் பெரிதாய் ஏதோ இருக்கிறது என்ற எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. இரண்டாம்பாதியில் நாயகன் தன் ஆசைக்காக பாலியல் தொழிலாளியைத் தேடிப் பயணிப்பதும் அதில் அவன் சந்திக்கும் சின்னச்சின்ன பிரச்னைகளையுமே பார்க்க முடிகிறது.

நாயகனாக நடித்துள்ளதோடு படத்தை இயக்கியுமிருக்கிற சாம்கானின் தோற்றத்தில், நடிப்பில், குரலில் லேசாய் சிம்புவின் சாயல்.

நாயகி எலிசபெத் அழகாக இருக்கிறார். நாயகனை முத்தத்தால் வசியப்படுத்துகிறார். மிச்சமிருக்கிற மிகச்சில கதாபாத்திரங்களின் நடிப்புப் பங்களிப்பும் கச்சிதம்.

சாந்தன் அனிபாஜகன் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம். ஜே.எஸ்.கே.வின் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தி.

ராஜேஷ்குமாரின் பரபரவிறுவிறு கிரைம் நாவல் போல் வந்திருக்க வேண்டிய படம். அடுத்த பாகமாவது அப்படி வருமென எதிர்பார்ப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here