தனுஷின் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறனுடன் தனுஷ் இணைந்திருக்கும் படம் ‘வடசென்னை.’
இந்த படத்தின் பத்திரிகை சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் தனுஷ், வெற்றிமாறன், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,டேனியல் பாலாஜி, பவண், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வடசென்னை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் சுவாரசிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில் நடிகர் தனுஷ்,”வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.2013 ல் இருந்தே இந்த கதை ரெடியாகிக் கொண்டு இருந்தது. அதன் பிறகு ஆடுகளம் பண்ணினோம். என் கவனம் வடசென்னையை நோக்கி தான் இருந்தது.ஒருகட்டத்தில் எப்ப பண்ணலாம் என வெற்றியிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒருநாள் அவர் இந்தக் கதையில் சிம்புவை நடிக்கவைக்க இருக்கிறேன் என்றார்.பின் படத்தின் முதுகெலும்பான முக்கிய கேரக்டரில் என்னை நடிக்கவைப்பதாக சொன்னார். எனக்கு அம்புட்டு பெருந்தன்மையெல்லாம் கிடையாது என்றேன். பின் சுற்றி சுற்றி கதை என்னிடமே வந்தது. ஒருவழியாக படம் அக்டோபர் 17 அன்று வரவிருக்கிறது.
இந்தப் படம் மூன்று பாகமாக வரவிருக்கிறது.ஏனெனில் ஆயிரம் பக்கம் கொண்ட கதை இது.வணிக ரீதியாக மூன்று பாகங்கள் எடுக்கவில்லை.சொல்ல விஷயம் நிறைய இருக்கு. வெற்றிமாறன் இயக்கத்தில் இன்னொரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளேன்.அது முடிந்த பிறகு தான் வடசென்னை இரண்டாம் பாகத்தில் அடியெடுத்து வைப்போம்.இந்த வடசென்னை அனைவருக்கும் பிடிக்கும். அமீர்,ஐஸ்வர்யா ராஜேஸ், ஆண்டிரியா போன்றவர்களின் உழைப்பு படத்துக்கு பலம். டெக்னீசியனும் உழைத்திருக்கிறார்கள்.படம் நன்றாகவே உருவாகி இருக்கிறது” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் , “படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சிகளும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின்  வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும்.அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார்.அவரின் பேச்சு, நடிப்பு என அனைத்திலும் அசத்தியுள்ளார். கலை இயக்குநர் ஜாக்கிங் ஜெயில் செட் மற்றும்  வடசென்னை செட்டை மிகப் பிரமாதமாக செய்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய நன்றி.
படத்தில் நடித்த ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி பவன் , சமுத்திரகனி கிஷோர் அற்புதமாக நடித்துள்ளார்கள்.அமீர், சமுத்திரகனி ஒரு இயக்குநர்களாக எனக்கு சிறிது உறுதுணையாக இருந்தார்கள்.படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “இந்த படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி.மேடையை பார்க்கும்போது ‘காக்கா முட்டை’ படத்தில் நடந்த விழா ஒன்று ஞாபகம் வருகிறது.இந்த படத்தில் ஒரு இனிமையான  கதாபாத்திரம் நடித்துள்ளேன். தனுஷ் அவர்களுடன் முதல் முதலாக ஜோடியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. படத்தின் முதல் சீனில் பார்த்தவுடன் என்னை லவ் பண்ணுவார் தனுஷ்” என்றார்.
இந்த விழாவில் நடிகர் மற்றும் இயக்குநரான அமீர் , ” ‘வடசென்னை’ படத்தை பார்த்தேன் ஒரு ரசிகனாக. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. தனுஷ் அவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. வெற்றிமாறன் ஒரு தரமான படத்தினை இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா ‘தரமணி’ போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நாம் பார்த்திருக்கிறோம் .இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைவருமே மிகவும் அருமையாக நடித்துள்ளனர் இந்த படத்தின். சக்சஸ்மீட்டில் மீண்டும் சந்திக்கிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்,”இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு முதல் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த மாதிரி படங்கள்  வெற்றிமாறனால் மட்டுமே இயக்க முடியும் .படத்தில் தனுஷ் அவர்கள் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, திறமையான நடிகர். வெற்றிமாறன் அவர்களுடன் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.என்னுடைய வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here