விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சாமி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அதிரூபனே’ என்ற மெலோடி பாடல் மற்றும் ‘மிளகாப் பொடியே’ , ‘அம்மா அம்மா’ பாடல்களும் பல மில்லியன் லைக்குகளை அள்ளியிருக்கிறது.

இது தவிர, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘டர்னக்கா’ என்ற பாடலும், ‘புது மெட்ரோ ரயிலு’ என்ற பாடலும் தாறுமாறாய் ஹிட்டடித்திருக்கிறது.

இந்த பாடல்களை டி.எஸ்.பி. என்றழைக்கப்படுகிற இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் எழுதியிருக்கிறார் என்பதுதான் ஹைலைட்!

தமிழில் இதுவரை அவர் பல பாடல்களில் வரிகளை எழுதியிருந்தாலும் முழு பாடலையும் எழுதியது இதுவே முதல்முறை. தெலுங்கில் தான் எழுதிய பாடலுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதை டிஎஸ்பி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ‘சாமி 2 ’ வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு படத்தின் மொத்த பாடல்களுக்கும் பெரியளவில் வரவேற்பு கிடைத்த சாதனையைச் செய்திருக்கிறது!

இந்த சாதனைக்குச் சொந்தக்காரரான தேவிஸ்ரீ பிரசாத் அதே சந்தோஷத்தோடு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதை தொடர்ந்து இப்போது அவர் அமெரிக்காவில் இசைப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். இதற்கான பயிற்சி மற்றும் ஒத்திகையில் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறார்.

ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் ராக் ஸ்டாரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு படங்களிலிருந்து ரசிகர்கள் விரும்பும் பாடல்கள் இடம்பெறச் செய்யவுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியை அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here