சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் குதிரைவாலி உளுந்து சாதம்!

-சித்தா மற்றும் இயற்கை மருத்துவர் அருண் சின்னையா

தேவையானவை:
குதிரைவாலி அரிசி – 1 கிலோ
உளுந்து – 300 கிராம்
வெந்தயம் – 1 டேபிள்
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 3 பல்
உப்பு – 4 ஸ்பூன்

செய்முறை:
தேங்காயைத் துருவி வைத்துக் கொண்டு பூண்டைத் தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் உளுந்து போட்டு 5 நிமிடம் வாசனை வரும் வறுத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 ½ கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் குதிரைவாலி அரிசியைக் கழுவி அதனுடன் உளுந்தையும் சேர்க்கவும். பின்னர், சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு வேக விடவும். குதிரைவாலி சாதம் முக்கால் பாகம் வெந்ததும் உப்பு போட்டு நன்கு கிளறி விடவும். பின்பு தேங்காய்த் துருவல் போட்டு நன்கு கிளறி விடவும். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நன்கு வெந்ததும் இறக்கவும். (தண்ணீரின் அளவு குதிரைவாலி, உளுந்து இரண்டும் வேகும் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.)
கை கால் வீக்கம் வலியைக் குறைக்கும். உடல் அசதியைப் போக்கும். சோர்வை அகற்றும். சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும்.

சித்தா மற்றும் இயற்கை மருத்துவர் அருண் சின்னையாவை தொடர்புகொள்ள:- Dr. Arun Chinniah,
Aadhavan Siddhashram P Ltd.
No: 155, 94th Street, 15th Sector, KK Nagar, Chennai-600 078. Office No : 044 – 2372 8599 / 8124076667 / 8124176667 aadhavansiddhacure@gmail.com / arunchinniah@gmail.com / www.drarunchinniah.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here