முதுகுவலி ஒரு காலத்தில் வயது முதிர்ச்சியின் காரணமாகவே வந்தது. ஆனால் இப்போதெல்லாம் மிக இளம் வயதிலேயே முதுகுவலி வந்துவிடுகிறது.

தொடர்புடைய படம்

நிறைய நேரம் இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வது, கம்யூட்டர் முன்பாக அதிக நேரம் செலவிடுவது ஆகியவை தான் முதுகுவலி உண்டாக மிக முக்கியக் காரணம்.
இந்த கடுமையான முதுகுவலியின் காரணமாக, கனமான பொருள்களை தூக்கிச் செல்ல முடியாது. ஓரிடத்தில் அதிக நேரம் நிற்கவோ உட்காரவோ முடியாமல் போகும். இதுவே 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், முதுகு, கை, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் மிகக் கடுமையான வலி உண்டாகும். இடுப்பு மூட்டுக்களில் உள்ள நரம்புகளில் கூட பிரச்னைகள் உண்டாகும்.

முதுகுவலிக்கான தீர்வு

பூண்டு பால்:

பால் – 300 மில்லி பூண்டு – 8 முதல் 10 பற்கள் வரை (அளவைப் பொறுத்தது)

அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து பால் பொங்கி, லேசாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பூண்டு பற்களை தோல் உரித்துவிட்டு தட்டி, கொதிக்கும் பாலில் போடவும் மீண்டும் மிதமான தீயிலேயே வைத்து பூண்டு நன்கு வேகும்வரையில், வைக வைத்துப் பின் இறக்க வேண்டும்.பூண்டப்பாலை தினமும் அதிகாலையில் அல்லது இரவு உணவுக்குப்பின் குடித்து வர இடுப்பு அல்லது முகுதுவலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே செல்வதை உணர்ந்து கொள்ள முடியும். இந்த பூண்டுப்பால் என்பது இடுப்பு மூட்டுக்களில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும். மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிக அதிக அளவில் உள்ளன. அதனால் அழற்சி பிரச்னை உள்ளவர்கள் அல்லது யார் வேண்டுமானாலும் இதை குடிக்கலாம். இந்த சுவையை கொஞ்சம் அதிகரிக்க கொஞ்சம் தேன் கலந்தும் பருகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here