வீரம், காதல், நட்பு… ஜனரஞ்சகமான கதைக்களத்தில் ‘கணேசாபுரம்.’ பாடல்கள் வெளியீடு!

0
72
சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் P. காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வீராங்கன்.K இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம்.
நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸும் நடித்துள்ள இந்த படத்தில் சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது…

மதுரை மண்ணை மையமாகக் கொண்ட இந்த படம் 1990 காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது.

வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம்.
ஹீரோவும் ஹீரோயினும் புதுமுகங்களை போலல்லாமல் தங்கள் கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வாசு தனது கேமராவின் மூலம் ரசிகர்களை 90 காலகட்டத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறோம்.
அதேபோல்இசையமைப்பாளர் ராஜாசாயும் தனது இசையின் மூலம் இக்கதைக்கு உயிர் ஊட்டி உள்ளார் எனலாம்.படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இத்திரைப்படத்தை ஸ்டாண்டர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் 18.2.2021 அன்று சூரியன் எஃப்.எம். ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here